Vikram 62 : ஆரமிக்கலாங்களா.. ரெடி ஜூட் சொன்ன சீயான் - விறுவிறுப்பாக துவங்கிய "வீர தீர சூரன்" - வைரல் வீடியோ!

By Ansgar R  |  First Published Apr 27, 2024, 10:37 AM IST

Veera Dheera Sooran : பிரபல இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் அடுத்தபடியாக உருவாகும் படம் தான் சீயான் விக்ரமின் வீர தீர சூரான். இப்பட படப்பிடிப்பு மதுரையில் துவங்கியுள்ளது.


தமிழ் திரையுலகில் ஒரு குட்டி கமலஹாசன் என்று போற்றப்படும் ஒரு மாபெரும் நடிகர் தான் சீயான் விக்ரம். தன்னுடைய திரைப்படத்திற்காக தன் உடலை எந்த ஒரு உச்சத்திற்கும் எடுத்து சென்று மாற்றி அமைக்கும் ஒரு வல்லமை கொண்ட வெகு சில நடிகர்களில் ஒருவர் விக்ரம். தமிழ் சினிமாவில் டப்பிங் கலைஞராக பணியாற்ற தொடங்கி, இயக்குனர் பாலாவின் "சேது" என்கின்ற திரைப்படத்தின் மூலம் மிகப் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்தவர்.

இன்று ரசிகர்கள் அனைவரும் சீயான் என்று அன்போடு அழைக்கும் ஒரு மிகச்சிறந்த நடிகராக உருவெடுத்துள்ள விக்ரம். விரைவில் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாக்கியுள்ள தங்கலான் திரைப்படம் திரைக்கு வர உள்ள நிலையில், அண்மையில் விக்ரமின் 62வது படம் குறித்த அறிவிப்பு வெளியானது. தமிழ் திரை உலகில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான "பண்ணையாரும் பத்மினியும்" திரைப்படத்தின் மூலம் இயக்குனராக களம் இறங்கிய எஸ்.யு அருண்குமார் அதன் படத்தை இயக்குகிறார். 

Tap to resize

Latest Videos

undefined

Cheran : சேரன் மகளின் திருமணம்.. மனக்கசப்பை மறந்து வாழ்த்திய பார்த்திபன் - சேரன் கொடுத்த ரிப்ளை என்ன தெரியுமா?

எஸ்.ஜே சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இந்த திரைப்படத்தில் நடிக்க உள்ளனர். அண்மையில் இந்த திரைப்படத்தின் பெயர் "வீர தீர சூரன்" என்று அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாக உள்ள நிலையில், முதலில் இரண்டாம் பாகம் வெளியாகும் என்றும், அதன் பிறகு அதன் Perquel வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Ready ஜூட்?? 🔥 pic.twitter.com/kcpbKpYoIY

— Vikram (@chiyaan)

இந்நிலையில் நேற்று மதுரையில் இப்பட பணிகள் துவங்கியுள்ளது, அந்த வீடியோவை விக்ரம் தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு தனது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தி உள்ளார். அவருடைய ரசிகர்கள் அந்த வீடியோவை வேற லெவலில் ட்ரெண்டாகி வருகின்றனர். 

Pan India : பிரபாஸின் கல்கி 2898 AD முதல்.. Jr. NTRன் தேவாரா வரை - Box Officeல் வேட்டை நடத்த வரும் மூவிஸ்!

click me!