திருமண கோலத்தில் கழுத்தில் தாலியோடு குத்தாட்டம் போடும் கீர்த்தி சுரேஷ்! வைரலாகும் படக்குழு வெளியிட்ட போஸ்டர்!

Published : Oct 17, 2022, 01:34 PM ISTUpdated : Oct 17, 2022, 02:12 PM IST

இன்று தன்னுடைய 30-வது பிறந்தநாளை கொண்டாடும் தேசிய விருது நடிகை, கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து, 'தசரா' படக்குழு வித்தியாசமான போஸ்டர் ஒன்றை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.  

PREV
15
திருமண கோலத்தில் கழுத்தில் தாலியோடு குத்தாட்டம் போடும் கீர்த்தி சுரேஷ்! வைரலாகும் படக்குழு வெளியிட்ட போஸ்டர்!

தமிழ் சினிமாவில் மிக குறுகிய காலத்தில், ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர்கள் ஒரு சிலரே... அந்த வகையில் நடிகர் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக 'இது என்ன மாயம்' படத்தில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ், ஆரம்பத்தில் இவருடைய நடிப்பில் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளான போதிலும், தன்னுடைய இயல்பான நடிப்பு திறமையை வெளிப்படுத்தி தேசிய விருதை பெரும் அளவிற்கு உயர்ந்தார். 

25

சமீப காலமாக நயன்தாரா பாணியில், ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களையே அதிகம் தேர்வு செய்து நடித்து வந்த கீர்த்தி சுரேஷ், அப்படி இவர் தேர்வு செய்து நடித்த படங்கள் எதுவும் பெரிய அளவிற்கு வெற்றி பெறாததால், மீண்டும் தெலுங்கு மற்றும் தமிழில் முன்னணி நடிகர்களுக்கு கதாநாயகியாக நடித்து வருகிறார். அந்த வரிசையில் தற்போது தெலுங்கில் இரண்டு திரைப்படம் மற்றும் தமிழில் இரண்டு திரைப்படங்கள் இவரது கைவசம் உள்ளது.

மேலும் செய்திகள்: rakul preet singh : சிவப்பு வண்ண உடையில் மனதை மயக்கும்..ரகுல் ப்ரீத் சிங்..நியூ லுக்
 

35

கீர்த்தி சுரேஷ் இன்று தன்னுடைய 30 ஆவது பிறந்தநாளை மிக சிறப்பாக கொண்டாடி வரும் நிலையில், இவரது பிறந்தநாளை மேலும் சிறப்பிக்கும் விதமாக... 'தசரா' படக்குழு வித்தியாசமான போஸ்டர் ஒன்றை வெளியிட்டு கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது.

45

நானி, தனது வழக்கமான பாணியிலிருந்து முற்றிலுமாக மாறி, முதல் முறையாக  முழுக்க முழுக்க  மாறி, ஒரு கிராமிய கேரக்டரில் கரடுமுரடான தோற்றத்தில் நடித்து வரும் திரைப்படம் 'தசரா'. இந்த கேரக்டரில் நடிப்பதற்காக  அவர்  நிறைய பயிற்சி எடுத்து தன்னை முழுமையாக கிராமத்து மனிதனாக  மாற்றிக்கொண்டுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தில் நானிக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார் .

மேலும் செய்திகள்: நெருங்கி பழகினோம்.. அடிச்சு டார்ச்சர் செய்தான் - அர்னவ் மீது திருநங்கை கொடுத்த அடுக்கடுக்கான புகாரால் பரபரப்பு
 

55

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், கீர்த்தி சுரேஷின் வித்தியாசமான போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு தற்போது, வாழ்த்து தெரிவித்துள்ளது. இந்த படத்தை இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடிலா என்பவர் இயக்கி வருகிறார். சத்யன் சூரியன் ISC ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் சமுத்திரக்கனி, சாய் குமார் மற்றும் ஜரீனா வஹாப் ஆகியோர் முக்கியமான பாத்திரங்களில் நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்: Sameera Reddy : பாத் டப்பில் நுரையுடன் சமீரா ரெட்டி...பழைய ஃபாமுக்கு திரும்பிட்டாரே!
 

Read more Photos on
click me!

Recommended Stories