'உதிரி பூக்கள்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அஞ்சு, பல தமிழ் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்னர் மிக சிறிய வயதிலேயே ஹீரோயினாக மாறியவர். தமிழை தொடர்ந்து, பல மலையாள திரைப்படங்களிலும் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இவர் மிக சிறிய வயதிலேயே தன்னுடைய தந்தையை விட, வயதில் மூத்த வில்லன் நடிகரும், கன்னட திரையுலகின் இயக்குனருமான டைகர் பிரபாகரை 1995 இல் திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆன ஒரே வருடத்தில் பிரிந்தார்.
இந்நிலையில் பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள அஞ்சு தந்தையை விட வயதில் மூத்தவரை திருமணம் செய்தது ஏன்? அவரை பிரிவதற்கு என்ன காரணம் என்பது குறித்து பேசி பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளார்.
அவரை விட்டு நான் வரும் போது, நான்கு மாதம் கர்ப்பமாக இருந்தேன். பின்னர் சில வாரம் கழித்து அவரே தன்னை தேடி வந்து வாழ அழைத்தார். ஆனால் என்னால் வரமுடியாது என மறுத்துவிட்டேன். பின்னர் தன்னுடைய மகனுக்கு 2 வயது இருக்கும் போது, அவர் இறந்து விட்டதாக செய்தி மட்டும் வந்தது என தெரிவித்துள்ளார். டைகர் பிரபாகரன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'முத்து' படத்தில் மீனாவின் தாய்மாமனாக, வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அஞ்சுவின் இந்த பேட்டி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.