தற்போது பைக் பயணம் செய்து வரும் அஜித் அவ்வப்போது ரசிகர்களுடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் தொடர்ந்து வெளியாகி வருவதையும், அதனை அஜித்தின் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் தாறுமாறாக வைரலாக்கி வருவதையும் பார்த்து வருகிறோம், அந்த வகையில் தற்போது அஜித் கார்கில் போர் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தியுள்ளார்.
தற்போது மூன்றாவது முறையாக இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் - போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் இன்னும் பெயரிடாத படத்தில் நடித்து வரும் அஜித், சமீபத்தில் தான்... விசாகப்பட்டினத்தில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்தார். இதற்காக சென்னையில் இருந்து அஜித் விசாகப்பட்டினம் செல்ல ஏர்போர்ட் சென்ற வீடியோ சமூக வலைத்தளத்தில் படு வைரலாகியது.
இதில் அஜித், கார்கில் போர் வீரர்கள் நினைவகத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்தியுள்ளார். மேலும் சில ராணுவ வீரர்களுடனும் புகைப்படம் எடுத்து கொண்டுள்ளார், இந்த புகைப்படங்களை வழக்கம் போல் அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.