எப்போதுமே தன்னுடைய ஃபேஷனில் அதிக வித்தியாசம் காட்டி, விதவிதமான போட்டோ ஷூட்டுகள் எடுத்து வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளவர் நடிகை சமந்தா. இவர் வெளியிடும் அதகள கவர்ச்சி புகைப்படங்களை பார்த்து ரசிப்பதற்கு என்றே தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது.
தமிழ் - தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் பிசியாக நடித்து வரும் சமந்தா - கீர்த்தி சுரேஷ் இருவருமே, தொடர்ந்து தரமான கதைகளையும், கதாநாயகிக்கு முக்கியத்தும் கொடுத்து எடுக்கப்படும் படங்களில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள்.
சமந்தா எப்படி மாடர்ன் உடைகளை தேர்வு செய்வதில் கெட்டி காரியோ... அதே போல் கீர்த்தி சுரேஷும் தன்னுடைய உடைகளில் அதிக கவனம் செலுத்துபவர். காரணம், இவர் நடிகை என்பதை தாண்டி ஃபேஷன் டிசைனிங் படித்தவர் என்பதால்.