தெலுங்கு திரை உலகில் அறிமுகமான நடிகை அனுஷ்காவை, தமிழில் அறிமுகப்படுத்தியது இயக்குனர் சுந்தர் சி தான். நடிகர் மாதவனை வைத்து இவர் இயக்கிய 'ரெண்டு' படத்தில் அனுஷ்கா ஹீரோயினாக நடித்திருந்தார். முதல் படத்தியிலேயே தன்னுடைய கவர்ச்சியால் ரசிகர்களை மிரட்டிய இவரை, அடுத்தடுத்து பல இயக்குனர்கள் தமிழில் நடிக்க வைக்க ஆர்வம் காட்டினர். பெரும்பாலும் தெலுங்கு படங்களில் நடிப்பதிலேயே அனுஷ்கா ஆர்வம் காட்டினாலும், குறிப்பிட்ட சில முன்னணி நடிகர்களுடன் மட்டுமே தமிழில் ஹீரோயினாக நடித்தார். அந்த வகையில் சூர்யா, விஜய், அஜித் போன்ற நடிகர்களுடன் அனுஷ்கா நடித்துள்ளார்.