Polladhavan Actress Divya Spandana Death News
தமிழில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக, 'குத்து' படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரம்யா. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு தமிழில் இவருக்கு அடுத்தடுத்த படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்தது. எனவே நடிகர் சூர்யா உடன் 'வாரணம் ஆயிரம்', தனுஷுடன் 'பொல்லாதவன்' அர்ஜுனுடன் 'கிரி' உள்ளிட்ட பல படங்களில் நடித்து கோலிவுட் ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்தார்.
Polladhavan Actress Divya Spandana Death News
நடிப்பையும் தாண்டி ஒரு கட்டத்திற்கு மேல் அரசியலிலும் புகுந்து விளையாட துவங்கினார் ரம்யா. மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் 'அம்ரீஷ்' உதவியுடன் அரசியலில் நுழைந்து, கர்நாடக மாநிலத்திலுள்ள மாண்டியா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். பின்னர் மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவியதால், தற்போது திரைப்பட தயாரிப்பு மற்றும் படம் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.
Actress Ramya Death News in Tamil
ரம்யா தற்போது ஜெனிவாவில் இருக்கிறாராம், மேலும் இதுபோல் வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் வெளியான பின்னரே ரசிகர்கள் பலர், நிம்மதியடைந்துள்ளனர்.
இந்த குழப்பத்திற்கு காரணம், ராஜ்குமார் குடும்பத்தைச் சேர்ந்த கன்னட நடிகர் விஜய் ராகவேந்திராவின் மனைவி ஸ்பந்தனா ராகவேந்திரா, கடந்த மாதம் ஆகஸ்ட் 6-ஆம் தேதி காலமானார். எனவே ஒருவேளை இவரை தான் சிலர் திவ்யா ஸ்பந்தனா என நினைத்து இந்த வதந்தியை கிளப்பி விட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.