Nanjil Vijayan Stand up comedian
விஜய் டிவியில் ஸ்டாண்ட் ஆப் காமெடி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நாஞ்சில் விஜயன். கலக்க போவது யாரு நிகழ்ச்சி தான் இவருடைய வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.
Nanjil vijayan Getup
இதன் மூலம் கிடைத்த பிரபலத்தை வைத்து, அடுத்தடுத்து பல மேடை நிகழ்ச்சிகளில் லேடிஸ் கெட்டப்பில் தோன்றி கவனத்தை ஈர்த்தவர்.
Nanjil vijayan Controversy
அதே போல் நாஞ்சில் விஜயன் சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத பிரபலமாகவும் பார்க்க படுகிறார். இவர்,யூடியூப்பில் வத்திக்குச்சி வனிதாவின் மூன்றாவது திருமணத்தை, விமர்சனம் செய்ததற்காக ஸ்டேஷன் வரை சென்று வந்தவர்.
IPL Ticket Issue
அதே போல், IPL கிரிக்கெட் டிக்கெட்டை 1500 ரூபாய்க்கு வாங்கி 15,000 வரை விலைபேசி நடிகை கும்தாஜுடன் இணைந்து விற்பனை செய்ததாகவும் சர்ச்சை எழுந்து ஓய்ந்தது.
Vijay tv Programs
இப்படி பல சர்ச்சைகளில் சிக்கினாலும், அவ்வப்போது விஜய் டிவி நிகழ்ச்சிகளில் மட்டும் ஆப்சென்ட் ஆகாமல் அட்டனென்ஸ் போட்டு விடும் நாஞ்சில் விஜயனுக்கு சமீபத்தில் மிகவும் எளிமையாக இவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
Marriage Reception
இதில் குடும்பத்தினர் மற்றும் சில நெருக்கமான நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து நாஞ்சில் விஜயனுக்கு நேற்று காலை திருமணமும் மாலை திருமண ரிசெப்ஷனும் நடந்துள்ளது.
Marriage Reception
திருமணத்தில் கலந்து கொள்ளாத பல பிரபலங்கள் ரிசெப்ஷனில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர். குறிப்பாக விஜய் டிவி பிரபலங்கள் பலர் இதில் கலந்து கொண்டுள்ளனர். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வாழ்த்துக்களை குவித்து வருகிறது.
Najil vijayan Family
குறிப்பாக தனது திருமணம் குறித்து பேசிய நாஞ்சில் விஜயன் கூறிய போது... ‘எங்களோடது சாதாரண குடும்பம் தான். டிவியில் வருமானம் எல்லாம் எப்படி இருக்கும் என்று உங்களுக்கே தெரியும். அந்த ஒரு சூழலில் தம்பியின் வருமானத்திற்காக சென்னையில் ஒரு கடை வைத்துக் கொடுத்தேன்.
nanjil vijayan emotional speech:
தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணி கொடுத்துட்டு தான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று உறுதியாக இருந்தேன். தங்கச்சி கல்யாணமும் நல்லபடியாக முடிந்தது. இந்த இரண்டு கடமைகளும் தான் என் கண் முன்னாடி பெருசாக இருந்தது என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.