இயக்குனர் ராமால், 'கற்றது தமிழ்' படம் மூலம் ஹீரோயினாக அறிமுகப்படுத்தப்பட்ட அஞ்சலி. தொடர்ந்து கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படங்களில் நடித்து, ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். அந்த வகையில் இவர் நடித்த, 'அங்காடித் தெரு', 'தூங்கா நகரம்', 'மங்காத்தா', 'எங்கேயும் எப்போதும்', 'கலகலப்பு' போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிபெற்றது.