தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனான உதயநிதி ஸ்டாலின், தமிழ் சினிமாவில் ஒரு தயாரிப்பாளராக கடந்த 2008-ம் ஆண்டு அறிமுகமானார். அவர் தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் விஜய்யின் குருவி, சூர்யாவின் ஆதவன், கமலின் மன்மதன் அம்பு என அறிமுகமான சில வருடங்களிலேயே முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்து பாப்புலர் ஆனார்.