நடிகை ரம்யா பாண்டியனை மக்கள் மத்தியில் பேமஸ் ஆக்கியது அவர் நடத்திய மொட்டைமாடி போட்டோஷூட் தான். காட்டன் சேலையில் கவர்ச்சி ததும்ப அவர் வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் செம்ம வைரல் ஆனதும், யார்ரா இந்த பொண்ணு என நெட்டிசன்கள் வலைவீசி தேட, அதன்பின்னர் தான் சோசியல் மீடியாவில் அசுர வளர்ச்சி கண்டார் ரம்யா பாண்டியன்.
நடிகை ரம்யா பாண்டியன் இதுவரை டம்மி டப்பாசு, ஜோக்கர், ஆண் தேவதை, இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் போன்ற படங்களில் நடித்துள்ளார். படங்களில் கவர்ச்சி காட்டாமல் அடக்க ஒடுக்கமாக நடிக்கும் இவர் போட்டோஷூட் என வந்துவிட்டால் கவர்ச்சியை வாரி வழங்கி வருகிறார்.
சொல்லப்போனால் சேலையில் கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தும் டிரெண்டையே ஆரம்பித்து வைத்தவர் ரம்யா பாண்டியன் தான். இவரது போடோஷூட்டுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்ததால், அதையே மற்ற நடிகைகளும் பின்பற்றத் தொடங்கினர். ஆனால் இவர் ரேஞ்சுக்கு யாரும் பாபுலர் ஆகவில்லை.
இதையும் படியுங்கள்... வலிமை பட நாயகி ஹூமா குரேஷியின் ஓவர் ஹாட் போட்டோஸ்
ரம்யா பாண்டியனை மக்கள் மனதில் இடம்பெறச் செய்த ஒரு நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் தான். இந்நிகழ்ச்சியின் 4-வது சீசனிலும், அண்மையில் நடந்து முடிந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட ரம்யா பாண்டியன் இரண்டிலும் இறுதிப்போட்டி வரை முன்னேறினார்.
தற்போது படங்களில் பிசியாக நடித்து வரும் ரம்யா பாண்டியன், அவ்வப்போது விதவிதமான போட்டோஷூட்களையும் நடத்தி வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது ஹாலிவுட் ஹீரோயின்களைப் போல் நீளமான கோர்ட் அணிந்து போடோஷூட் ஒன்றை எடுத்துள்ளார். அதன் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.