தமிழ் சினிமாவில் 80-களில் ரஜினி, கமல் என்ற இரு ஜாம்பாவன்கள் உச்சத்தில் இருந்த போது அவர்களுக்க்கு பல வெற்றிப்படங்களை கொடுத்த பலர் உள்ளனர். உதாரணமாக விஜயகாந்த், மோகன், ராமராஜன், கார்த்திக், போன்ற நடிகர்களை உதாரணமாக சொல்லலாம். குறிப்பாக நடிகர் விஜய்காந்த் 80-களில் அதிக படங்களில் நடித்திருந்தார் விஜயகாந்த். இதனால் மிகக்குறுகிய காலத்திலேயே அதிக படங்களில் நடித்து ரசிகர்களை ஈர்த்து வந்தார்.
Vijayakanth
மறுபுறம் விஜய்காந்த் அதே காலக்கட்டத்தில் நடித்த நானே ராஜா நானே மந்திரி, நீதியின் மறுபக்கம், அம்மன் கோயில் கிழக்காலே, ஊமை விழிகள் என தொடர் வெற்றிப்படங்களை கொடுத்தார். குறிப்பாக விஜயகாந்த் நடிப்பில் வெளியான உழவன் மகன், பூந்தோட்ட காவல்காரன் போன்ற படங்கள் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது.
இதனால் அப்போது விஜய்காந்த் தான் சூப்பர் ஸ்டார் என்று எழுதத்தொடங்கியது. விஜயகாந்தை சூப்பர்ஸ்டார் என்று குறிப்பிட்டு சிறப்பு கட்டுரைகளை எழுதத் தொடங்கினர். அது மட்டுமே ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ் என எந்த முன்னணி நடிகர்களின் 100-வது படமும் பெரிதாக வெற்றி பெறவில்லை. ஆனால் விஜயகாந்த் மட்டும் அதற்கு விதிவிலக்கு. விஜயகாந்தின் 100-வது படமான கேப்டன் பிரபாகரன் படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. இப்படம் வெள்ளி விழா கண்டு சாதனை படைத்தது. மேலும் 90களின் சின்னக்கவுண்டர், மாநகர காவல் என பல மெகா ஹிட் படங்களை கொடுத்தார்.
மறுபுறம் 90களில் தளபதி, அண்ணாமலை, பாட்ஷா, முத்து, என பல மெஹா ஹிட் படங்களில் நடித்த ரஜினி பாக்ஸ் ஆபிஸ் மன்னனாக மாறத் தொடங்கினார். அப்போது தொடங்கி இன்று வரை சூப்பர் ஸ்டாராகவே இருக்கிறார் ரஜினி. சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றியே அதற்கு சான்று..