ஐஸ்வர்யா ராய் முதல் நயன்தாரா வரை.. டாப் 10 பணக்கார இந்திய நடிகைகள்.. இவர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Published : Sep 29, 2023, 10:40 AM ISTUpdated : Sep 30, 2023, 07:32 AM IST

இந்தியாவின் முதல் 10 பணக்கார நடிகைகளின் பட்டியலை பார்க்கலாம். 

PREV
111
ஐஸ்வர்யா ராய் முதல் நயன்தாரா வரை.. டாப் 10 பணக்கார இந்திய நடிகைகள்.. இவர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இந்தியத் திரையுலகம், உலக அரங்கிலும் பார்வையாளர்களைக் கவர்ந்து, அசாத்திய திறமையான நடிகர்களின் தாயகமாக உள்ளது. இந்திய நடிகர்களின் இயல்பான நடிப்பு, ஈடு இணையாற்ற அழகு, வசீகரம் ஆகியவை காரணமாக ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த பல உச்ச நட்சத்திரங்கள் உள்ளனர். இவர்களின் நடிப்புக்கு விமர்சன ரீதியில் நல்ல பாராட்டு கிடைத்து வரும் அதே வேளையில், குறிப்பிடத்தக்க செல்வத்துடன் ஆடம்பர வாழ்க்கையை முறையை பின்பற்றி வருகின்றனர். இந்த பதிவில் இந்தியாவின் முதல் 10 பணக்கார நடிகைகளின் பட்டியலை பார்க்கலாம். 

211

ஐஸ்வர்யா ராய் : இந்தியாவின் பணக்கார நடிகைகள் பட்டியலில் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் முதலிடத்தில் உள்ளார். அவரின் சொத்து மதிப்பு ரூ.828 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அவர் ஒரு படத்துக்கு 10 கோடி சம்பளம் வாங்குகிறார். 

311

பிரியங்கா சோப்ரா : ரூ.580 கோடி சொத்து மதிப்புடன் நடிகை பிரியங்கா சோப்ரா இந்த பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளார். அவர் ஒரு படத்திற்கு சம்பளம் - 15 முதல் 40 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம்.

அஞ்சலி முதல் அனுஷ்கா வரை... விபச்சாரியாக நடிச்சு வில்லங்கத்தை விலைக்கு வாங்கிய தமிழ் ஹீரோயின்ஸ் லிஸ்ட் இதோ
 

411
Deepika Padukone

தீபிகா படுகோன் : இந்த பட்டியலில் 3-வது இடத்தில் இருப்பது நடிகை தீபிகா படுகோன். அவரின் சொத்து மதிப்பு ரூ.; 500 கோடி. அவர் ஒரு படத்திற்கு சம்பளம் - 15 முதல் 30 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. 

511

கரீனா கபூர் : இந்த பட்டியலில் பாலிவுட் நடிகை கரீனா கபூர் 4-வது இடத்தில் உள்ளார். அவரின் நிகர மதிப்பு ரூ.440 கோடி. அவர் ஒரு படத்திற்கு ரூ. 8 முதல் 18 கோடி வரை சம்பளம் பெறுகிறார்.

611

அனுஷ்கா சர்மா : ரூ.255 கோடி சொத்து மதிப்புடன் இந்த பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளார். அவர் ஒரு படத்திற்கு ரூ. 12 முதல் 15 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.

711
maduri dixit

மாதுரி தீட்ஷிட் : இந்திய பணக்கார நடிகை பட்டியில் பாலிவுட் நடிகை மாதுரி தீட்ஷித் 6-வது இடத்தில் உள்ளார். அவரின் சொத்து மதிப்பு ரூ 250 கோடி ஆகும். அவர் ஒரு படத்திற்கு சம்பளம் - ரூ 4 முதல் 5 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.

811

கத்ரீனா கைஃப் : ரூ 235 கோடி சொத்து மதிப்புடன் பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் இந்த பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளார். அவர் ஒரு படத்திற்கு சம்பளம் - 10 முதல் 12 கோடி வரை சம்பளம் பெறுகிறார்.

சொந்தமாக ஜெட் விமானம் வைத்திருக்கும் ஒரே தென்னிந்திய நடிகை நயன்தாரா தான்! அதன் மதிப்பு இத்தனை கோடியா?
 

911

ஆலியா பட் : பாலிவுட் நடிகை ஆலியா பட் அதிக சொத்து வைத்திருக்கும் நடிகைகளில் 8-வது இடத்தில் உள்ளார். அவரின் மொத்த சொத்து மதிப்பு ரூ 229 கோடி ஆகும். அவர் ஒரு படத்துக்கு சம்பளம் - 10 முதல் 15 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.

 

 

1011
Nayanthara

நயன்தாரா : இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே தென்னிந்திய நடிகை நயன்தாரா மட்டுமே. அவரின் மொத்த சொத்து மதிப்பு ரூ.200 ஆகும். ஒரு படத்திற்கு ரூ. 10 முதல் 11 கோடி வரை நயன்தாரா சம்பளம் வாங்குகிறார்.

1111

ஷ்ரத்தா கபூர் : இந்த பட்டியலில் 10-வது இடத்தில் இருப்பது நடிகை ஷ்ரத்தா கபூர். அவரின் மொத்த சொத்து மதிப்பு - ரூ 123 கோடி ஆகும். அவர் ஒரு படத்திற்கு - ரூ 7 முதல் 15 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். 

Read more Photos on
click me!

Recommended Stories