தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கென தனி ரசிக பட்டாளமே உள்ளனர். தற்போதைய காலத்தில் பல சேனல்கள் பல்வேறு சீரியல்களை போட்டி போட்டுக்கொண்டு ஒளிபரப்பி வருகின்றன. ஆனால் மற்ற சேனல்களுக்கு ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு வரவேற்பு கிடைத்தாலும் சீரியல் என்றாலே அது சன் டிவி சீரியல் தான் என்ற நிலையே தற்போதும் நீடித்து வருகிறது.
டிக்டாக் மூலம் பிரபலமான கேப்ரியல்லா, சன் டிவியில் சுந்தரி என்ற சீரியலில் முதன்மை கேரக்டரில் நடித்து வருகிறார். தற்போது இந்த சீரியலின் 2-ம் பாகம் ஒளிபரப்பாகி வரும் நிலையில் சுந்தரி கேரக்டர் மூலம் தமிழ்நாடு முழுவதும் பிரபலமாகிவிட்டார். இவரின் ஒருநாள் சம்பளம் ரூ.12,000 ஆகும்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் நடித்தன் மூலம் அனைவரையும் கவர்ந்த ஆல்யா மானசா, சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவை திருமணம் செய்து கொண்டார். பின்னர் ராஜா ராணி 2 சீரியலில் நடித்த போது கர்ப்பமானதால் சீரியலை விட்டு விலகினார். தற்போது சன் டிவியில் இனியா சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். இவரின் ஒரு நாள் சம்பளம் ரூ.20,000 ஆகும்.
பலரும் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றான எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி கேரக்டரில் மதுமிதா நடித்து வருகிறார். கன்னடத்தில் இவர் பல சீரியல்களில் நடித்திருந்தாலும் தமிழ் ரசிகர்களின் மனதை வென்ற மதுமிதாவின் ஒரு நாள் சம்பளம் ரூ.20,000 ஆகும்.