40 வயதில் திருமணம் செய்ய உள்ள நடிகர் சிம்பு..? பொண்ணு யாரு தெரியுமா? தீயாக பரவும் தகவல்..

Published : Sep 28, 2023, 12:54 PM ISTUpdated : Sep 28, 2023, 01:05 PM IST

பல சர்ச்சைகள், பல நெகட்டிவ் விமர்சனங்களுக்கு பிறகும் தற்போது தமிழின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார்.

PREV
16
40 வயதில் திருமணம் செய்ய உள்ள நடிகர் சிம்பு..? பொண்ணு யாரு தெரியுமா? தீயாக பரவும் தகவல்..

குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமான சிலம்பரசன்  2002-ம் ஆண்டில் வெளியான காதல் அழிவதில்லை படத்தின் மூலம் ஹீரோவானார். அதன்பின்னர் ஒரு சில ஹிட் படங்களை கொடுத்த சிம்பு, பின்னர் பல சர்ச்சைகள், பல நெகட்டிவ் விமர்சனங்களுக்கு பிறகும் தற்போது தமிழின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார்.

26

சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இந்த நிலையில் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ளார். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்க உள்ளது.

போட்டி போட்டு அழகில் மயக்கும் சிஸ்டர்ஸ்.. வனிதாவின் அக்கா அனிதா, கவிதா விஜயகுமாரின் க்யூட் போட்டோஸ்..
 

36

எனினும் தற்போது 40 வயதாகும் சிம்பு இன்னும் திருமணம் செய்யாமல் உள்ளார். இதனால் இவர் திருமணம் குறித்து அவ்வபோது சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் இலங்கையை சேர்ந்த பெண் ஒருவரை சிம்பு திருமணம் செய்து கொள்ள உள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியானது.

46

இந்த நிலையில் சிம்புவின் திருமணம் குறித்து புதிய தகவல் ஒன்று பரவி வருகிறது. அதாவது நடிகர் சிம்பு ஆந்திராவை சேர்ந்த மிகப்பெரிய தொழிலதிபரும், சினிமா ஃபைனான்ஸியருமான ஒருவரின் மகளை திருமணம் செய்து கொள்ள இருக்கிறாராம். எனினும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை என்பதால் இந்த தகவல் எந்தளவு உண்மை என்ற தகவல் வெளியாகவில்லை.

56
Simbu and Kamal Haasan

முன்னதாக சிம்பு நயன்தாராவை காதலித்து வந்தார். ஆனால் இருவரும் பின்னர் பிரேக் அப் செய்துவிட்டனர். பின்னர் நடிகை ஹன்சிகாவும் சிம்புவும் காதலிப்பதாக தகவல் வெளியானது. பின்னர் ஹன்சிகாவும் பிரேக் அப் செய்து விட்டார்.

அசோக் செல்வன் திருமணத்தில் பாட்டுக் கச்சேரி நடத்திய சூர்யாவின் தங்கை பிருந்தா... வேறலெவல்ல பாடுறாங்களே!
 

66

சமீபத்தில் தெலுங்கு நடிகை நிதி அகர்வாலும் சிம்புவும் காதலித்து வருகின்றனர் எனவும் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளனர் என்று வேகமாக தகவல் பரவியது. எனினும் அது வெறும் வதந்தியாகவே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories