ஷூட்டிங்கில் விபத்து... ஸ்டண்ட் சீனில் டூப் போடாமல் நடித்த நடிகர் விஜய் விஷ்வாவுக்கு கை முறிந்ததால் பரபரப்பு

First Published | Feb 27, 2023, 7:42 AM IST

ஏற்காட்டில் நடைபெற்று வந்த ஷூட்டிங்கில் சண்டைக் காட்சி படமாக்கப்பட்டபோது நடிகர் விஜய் விஷ்வாவுக்கு காயம் ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர் அபி சரவணன். 20-க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்துள்ள இவர் தனது பெயரை விஜய் விஷ்வா என மாற்றிக் கொண்டு படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் விஜய் விஷ்வா நடிக்கும் படத்தின் ஷூட்டிங் ஒன்று தற்போது சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதியில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக அங்கு அவர் நடிக்கும் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டது.

பைக்கில் இருந்து தாவிக் குதிக்கும் காட்சி படமாக்கப்பட்டபோது விஜய் விஷ்வா, எந்த டூப்பும் போடாமல் தானே ரிஸ்க் எடுத்து நடித்தார். அப்போது எதிர்பாராமல் கீழே விழுந்ததில் விஜய் விஷ்வாவின் வலது கை முறிந்தது. இதையடுத்து வலியால் துடித்த அவரை உடனடியாக மீட்டு சேலம் ஐந்து ரோடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் படக்குழுவினர் சேர்ந்தனர்.

இதையும் படியுங்கள்... மறைந்த நடிகர் மயில்சாமியின் குரலில் பேசி.. அஞ்சலி செலுத்திய மிமிக்ரி கலைஞர்கள் - நெகிழ்ச்சி வீடியோ!

Tap to resize

தற்போது நடிகர் விஜய் விஷ்வா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது. அவர் விரைவில் நலம் பெற்று வந்ததும் மீண்டும் ஷூட்டிங்கை தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். நடிகர் விஜய் விஷ்வா, இதற்கு முன் டூரிங் டாக்கீஸ், கொம்பு வச்ச சிங்கம்டா, சாகசம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் விஷால் நடிப்பில் உருவாகி வரும் மார்க் ஆண்டனி படப்பிடிப்பு தளத்தில் லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஓடி விபத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்த வீடியோ காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. நல்வாய்ப்பாக அந்த விபத்தில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... Cook With Comali 4 : குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய கோமாளி.. ரசிகர்கள் அதிர்ச்சி !!

Latest Videos

click me!