தமிழ் திரையுலகில் சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இன்றளவும் சினிமாவில் டாப் ஹீரோவாக கலக்கிக் கொண்டிருக்கும் ரஜினி, தன்னுடைய அறிமுக காலகட்டத்தில் பஸ் கண்டக்டராக இருந்து பின்னர் பாலசந்தரால் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அவர் தான் வாங்கிய முதல் கார் குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்றை நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதைப்பற்றி தற்போது பார்க்கலாம்.
நடிகர் ரஜினிகாந்த்தின் 16 வயதினிலே படம் ரிலீசாகும் முன்பு, ஏ.வி.எம் ஸ்டுடியோவில் ஒரு முன்னணி தயாரிப்பாளர் ஒருவர் தான் தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் ரஜினிகாந்தையும் நடிக்க கமிட் செய்துள்ளார். அப்போது ரஜினி அவரிடம் தனக்கு 10 ஆயிரம் சம்பளம் வேண்டும் என கேட்டுள்ளார். இறுதியில் பேச்சுவார்த்தைப் நடத்தி ரூ.6 ஆயிரம் சம்பளமாக தருவதாக அந்த தயாரிப்பாளர் கூறி இருக்கிறார். இதற்கு ஓகே சொன்ன ரஜினி தனக்கு அதில் ஆயிரம் ரூபாயை மட்டும் அட்வான்ஸாக கொடுக்குமாறு கேட்டிருக்கிறார்.
உடனே அங்கு வந்த தயாரிப்பாளர், ரஜினியை பார்த்து, ‘ஏண்டா நாலு அஞ்சு படம் தான் பண்ணிருக்க, பணம் கொடுக்கலேனா மேக்கப் போட மாட்டியா. உன்னமாதிரி எத்தனை பேர நான் பாத்திருக்கேண்டா. உன்னெல்லாம் ரேட்ல அலைய விடனும் டா. கேரக்டரும் கிடையாது, ஒன்னும் கிடையாது போடானு’ சொல்லிட்டாராம். கார்ல கூட்டிட்டு வந்த மாதிரி கார்லயே போய் இறக்கி விடுங்கனு கேட்டாராம் ரஜினி. அதற்கு காரெல்லாம் கிடையாது, அதுக்கெல்லாம் வாடகை கொடுக்கனும், நீ நடந்தே போனு சொல்லி ரஜினியை அவமானப்படுத்தி அனுப்பிவிட்டாராம் அந்த தயாரிப்பாளர்.
அப்போ ரஜினியின் மனதில் ஓடியதெல்லாம் ஒன்றுதானாம், இதே கோடம்பாக்கம் ரோட்ல வெளிநாட்டு கார்ல வந்து ஏவிஎம் ஸ்டூடியோல வந்து அந்த தயாரிப்பாளர் முன்னாடி கால்மேல கால்போட்டு உட்காரலேனா நான் ரஜினிகாந்த் இல்லை என்று முடிவு செய்து அடுத்தடுத்து படங்களில் நடித்து அதன்மூலம் வந்த வருமானத்தை வைத்து 2 ஆண்டுகளில் இட்டாலியன் ஃபியட் (Italian Fiat) என்கிற வெளிநாட்டு காரை 4.5 லட்சத்துக்கு வாங்கி உள்ளார்.
அது வெளிநாட்டு கார் என்பதால் அதற்காக ஒரு வெளிநாட்டு டிரைவரையும் வேலைக்கு வைத்து மறுநாள் காலை 8 மணிக்கு விட்றா வண்டிய ஏவிஎம்-க்குனு சொன்னேன். என்னை அவமானப்படுத்திய தயாரிப்பாளரின் கார் எங்கு நின்றதோ, அங்கேயே எனது காரையும் நிற்க வைத்து, கீழ இறங்கி வண்டி மேல ஸ்டைலா சாஞ்சு நின்னுகிட்டே அந்த தயாரிப்பாளர் முன் 2 சிகரெட் அடிச்சேன். அப்போ அங்கு கூட்டமே கூடிருச்சு” என தான் வாங்கிய முதல் கார் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார் ரஜினி.
இதையும் படியுங்கள்... சம்பளத்தை அதிரடியாக குறைத்த திரிஷா... லியோ படத்திற்காக அவர் வாங்கியது இவ்வளவு தானா?