சம்பளத்தை அதிரடியாக குறைத்த திரிஷா... லியோ படத்திற்காக அவர் வாங்கியது இவ்வளவு தானா?

லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிக்க நடிகை திரிஷா வாங்கிய சம்பள விவரம் லீக் ஆகி உள்ளது.

தென்னிந்திய திரையுலகில் 20 ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிகரமான நடிகையாக வலம் வந்துகொண்டிருப்பவர் திரிஷா. இவர் நடிப்பில் கடந்தாண்டு வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. அப்படத்தில் குந்தவையாக நடித்து அசத்தி இருந்த திரிஷாவுக்கு பாராட்டுக்களும் கிடைத்தன. பொன்னியின் செல்வன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் திரிஷாவின் மார்க்கெட் மளமளவென உயர்ந்துவிட்டது.

இதனால் அவர் சம்பளத்தையும் ஒரு படத்துக்கு 10 கோடி என உயர்த்தி இருந்தார். நடிகை திரிஷா நடிப்பில் தற்போது தி ரோடு, லியோ ஆகிய திரைப்படங்கள் தயாராகி வருகின்றன. இதில் லியோ திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார் திரிஷா. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தின் மூலம் நடிகர் விஜய்யுடன் 14 ஆண்டுகளுக்கு பின் ஜோடி சேர்ந்துள்ளார் திரிஷா. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்கள்... குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இந்த வார எலிமினேஷனில் நடந்த திடீர் டுவிஸ்ட்... இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!


இந்நிலையில், லியோ படத்திற்காக நடிகை திரிஷா வாங்கியுள்ள சம்பள விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தில் நடிக்க அவர் ரூ.3 கோடி மட்டுமே சம்பளமாக வாங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்னர் வரை ஒரு படத்துக்கு ரூ.10 கோடி வரை சம்பளமாக வாங்கி வந்த திரிஷா, தற்போது லியோ படத்துக்காக சம்பளத்தை குறைத்துக்கொண்டது ஏன் என்கிற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.

லியோ படத்தில் திரிஷாவுக்கு சின்ன ரோல் என்பதனால் அவருக்கு இவ்வளவு கம்மியாக சம்பளம் வழங்கப்பட்டு இருக்க வாய்ப்புள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது. மறுபுறம் விஜய் பட வாய்ப்பை நழுவவிட்டுவிட கூடாது என்பதற்காக சம்பளத்தை குறைத்து வாங்கி இப்படத்தில் நடிக்க திரிஷா கமிட் ஆனதாகவும் காத்துவாக்குல ஒரு தகவல் உலா வருகிறது. இதுகுறித்து திரிஷா விளக்கம் அளித்தால் தான் எது உண்மை என்பது தெரியவரும்.

இதையும் படியுங்கள்... தம்மாத்தூண்டு உடையில் கவர்ச்சியை அள்ளிவீசி... விதவிதமாக ஹாட் போஸ் கொடுத்த லாஸ்லியா - வைரலாகும் போட்டோஸ்

Latest Videos

click me!