குக் வித் கோமாளி நிகழ்ச்சி கடந்த 2020-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது சமையல் நிகழ்ச்சியாக இருந்தாலும் இதில் கலகலப்புக்கு பஞ்சமே இருக்காது. இந்நிகழ்ச்சியின் வெற்றிக்கும் அதுதான் முக்கிய காரணம். கொரோனா ஊரடங்கு சமயத்தில் வீட்டிலேயே முடங்கிக் கிடந்து மன அழுத்தத்தில் இருந்த மக்களை மனம்விட்டு சிரிக்க வைத்த பெருமை இந்நிகழ்ச்சிக்கு உண்டு. இதனால் முதல் சீசனிலேயே இந்நிகழ்ச்சி வேறலெவலில் ஹிட் அடித்தது.
கடந்த வாரம் இம்மியூனிட்டி வீக் என்பதால் அந்த வாரம் எலிமினேஷன் எதுவும் கிடையாது. அதேபோல் அந்த வாரம் வெற்றிபெற்ற ஆண்ட்ரியன் இந்த வாரம் நடந்துள்ள எலிமினேஷன் டாஸ்க்கில் இருந்து தப்பித்து சேஃப் ஜோனில் உள்ளார். இந்த வாரம் எலிமினேஷன் வீக் என்பதால் யார் வெளியேறப்போகிறார்கள் என்கிற பதற்றத்துடனே ரசிகர்கள் இருந்து வந்த நிலையில், நடுவர்கள் இருவரும் திடீர் டுவிஸ்ட் ஒன்றை கொடுத்துள்ளனர்.