பாண்டவர் இல்லம் சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் அனு. இந்த சீரியலில் ரோஷினி என்கிற கேரக்டரில் நடித்து வந்தார் அனு. அந்த சீரியலில் இவருக்கு முக்கியமான கதாபாத்திரம் என்பதால், அவர் நிஜத்தில் கர்ப்பமாக இருந்த சமயத்தில் கூட, சீரியலிலும் அவரது கேரக்டர் கர்ப்பமாக இருக்கும் படி அமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது. அந்த அளவுக்கு அந்த சீரியலில் மிகவும் முக்கியமான ரோலில் நடித்து வந்தார் அனு.