'ராஜா ராணி 2' சீரியலில் புது சந்தியாவாக களமிறங்கும் ஜீ தமிழ் சீரியல் நடிகை யார் தெரியுமா?

First Published | Feb 16, 2023, 1:01 PM IST

'ராஜா ராணி 2' சீரியலில் தற்போது ஹீரோயினாக நடித்து வரும், ரியா விஸ்வநாதன் விலக உள்ளதாக அறிவித்ததை தொடர்ந்து, சந்தியாவாக நடிக்க உள்ள நடிகை குறித்த தகவல் மற்றும் அவரின் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

விஜய் டிவி தொலைக்காட்சியில், கடந்த ஒரு ஆண்டுகளுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் 'ராஜா ராணி 2'. பாரதி கண்ணம்மா சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னெட் இயக்கி வரும் இந்த சீரியல், ஒரு பெண் விடா முயற்சி, மற்றும் தடைகளை தாண்டி எப்படி தன்னுடைய இலட்சியத்தை அடைகிறாள் என்பதை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது.
 

இந்த சீரியலில் முதலில் நடிக்க கமிட் ஆனவர், ராஜா ராணி சீரியல் முதல் பாகத்தில் ஹீரோயினாக நடித்து வந்தவர் ஆல்யா மானசா தான். ஹீரோவாக திருமணம் சீரியல் நடிகர் சித்து நடித்து வருகிறார்.
 

Anushka Shetty: உச்ச கட்ட அதிர்ச்சி..! அரிய வகை நோயால் அவதிப்படும் நடிகை அனுஷ்கா ஷெட்டி!

Tap to resize

மிகவும் விறுவிறுப்பான காட்சிகளோடு 'ராஜா ராணி 2' சீரியல் சென்று கொண்டிருந்த போது, இந்த சீரியலில் ஹீரோயினாக நடித்து வந்த ஆல்யா மானசா கர்ப்பமானதால், திடீர் என சீரியலை விட்டு விலகினார். 

raja rani 2

இவரை தொடர்ந்து, இந்த சீரியலில் புது சந்தியாவாக ரியா விஸ்வநாதன் நடித்து வந்தார். ஆல்யா மானஸாவிற்கு நிகராக இவரின் நடிப்புக்கும் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து, நல்ல வரவேற்பு கிடைத்து வந்த நிலையில், திடீர் என இவர் சீரியலை விட்டு விலக உள்ளதாக நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்தார்.

இனி 'ராஜா ராணி 2' சீரியலில் நான் சந்தியா இல்லை..! ஷாக்கிங் வீடியோ வெளியிட்ட ரியா விஸ்வநாதன்!
 

raja rani 2

என்ன காரணத்திற்காக 'ராஜா ராணி 2' சீரியலில் இருந்து ரியா விலகுகிறார் என்பது குறித்து வெளிப்படையாக தெரிவிக்காத நிலையில், சீரியல் குழுவினருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாகவே விலகுவதாக தகவல்கள் வெளியாகியது.
 

இது ஒருபுறம் இருக்க, ரியாவை தொடர்ந்து யார்? அடுத்த சந்தியாவாக நடிக்க உள்ளார் என்கிற தகவல் தான் தற்போது சமூக வலைத்தளத்தில் புகைப்படத்துடன் தீயாக பரவி வருகிறது.

அட்லீ செய்த செயல்.. செம்ம கோபத்தில் ஷாருக்கான்? இது தான் காரணமா..!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில், 'கோகுலத்தில் சீதை' சீரியலில் நடித்து வந்த ஆஷா கௌடா தான் அடுத்த சந்தியாவாக அவதாரம் எடுக்க உள்ளாராம். எனினும் அடிக்கடி சீரியலில் ஏற்படும் இது போன்ற மாற்றங்கள் கண்டிப்பாக சீரியலின் டி.ஆர்.பிக்கு பிரச்சனையாக அமையுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Latest Videos

click me!