டிஆர்பி-யில் அடிச்சு நொறுக்கும் சுந்தரி சீரியலை தடை செய்யனும்... கிளம்பிய நூதன எதிர்ப்பு

First Published | Feb 8, 2023, 12:33 PM IST

டி.ஆர்.பி.யில் அடிச்சு நொறுக்கும் சுந்தரி சீரியலை, தடை செய்ய வேண்டும் என்று ஆண் ஒருவர் நூதன எதிர்ப்பு தெரிவித்துள்ளது சமூக வலைதளங்களில் பேசுபொருள் ஆகி உள்ளது. 

தொலைக்காட்சி சீரியல்கள் மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. சீரியல்களுக்கு உள்ள மவுசு காரணமாக முன்பெல்லாம் திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பப்பட்டு வந்த சீரியல்கள் தற்போது சனிக்கிழமையும் ஆக்கிரமித்து விட்டன. அந்த அளவுக்கு மக்களுக்கு சீரியல் மீதான மோகம் அதிகரித்துவிட்டது. குறிப்பாக இல்லதரசிகளுக்கு சீரியல் ஒரு போதையாகவே மாறிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

அந்த வகையில், சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலுக்கும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில் சுந்தரியாக நடிகை கேப்ரியல்லா நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஜிஸ்னு மேனன் நடித்து வருகிறார். ஐஏஎஸ் ஆக வேண்டும் என்கிற கனவோடு கிராமத்தில் இருந்து நகரத்திற்கு வந்து கணவரால் ஏமாற்றப்பட்ட பெண்ணின் வாழ்க்கைப் போராட்டத்தை மையமாக வைத்து தான் இந்த தொடரின் கதை அமைந்துள்ளது.

இதையும் படியுங்கள்... பாலிவுட் நடிகையுடன் காதல்... மாலத்தீவில் மஜாவாக நடக்கபோகிறதா பிரபாஸின் நிச்சயதார்த்தம்? வெளியான ஷாக்கிங் தகவல்

Tap to resize

டி.ஆர்.பி.யில் அடிச்சு நொறுக்கும் இந்த சீரியலை, தடை செய்ய வேண்டும் என்று ஆண் ஒருவர் நூதன எதிர்ப்பு தெரிவித்துள்ளது தான் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருள் ஆகி உள்ளது. இரவு நேரத்தில் ஆண்களுக்கு சோறு வைப்பதை மறந்திவிட்டு, தன் மனைவி ஆர்வமாக சுந்தரி சீரியல் பார்ப்பதால் அந்த தொடரை தடை செய்ய வேண்டும் என ஒருவர் வீடியோ வாயிலாக கோரிக்கை வைத்துள்ளார்.

அவரின் இந்த பதிவுக்கு ஏராளமான ஆண்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர். ஒருவரோ சுந்தரி சீரியலோடு பாரதி கண்ணம்மா சீரியலையும் தடை செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியல் கடந்த வாரம் நிறைவடைந்த நிலையில், தற்போது உடனடியாக அந்த சீரியலின் இரண்டாம் பாகத்தை தொடங்கி ஒளிபரப்பு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... தனுஷின் இனிமையான குரலில் வெளியானது வெற்றிமாறனின் ‘விடுதலை’ பட பர்ஸ்ட் சிங்கிள்

Latest Videos

click me!