சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகைகளிடையே காதல் ஏற்பட்டு அவர்கள் திருமணம் செய்துகொள்வது சமீப காலமாக அதிகரித்த வண்ணம் உள்ளது. ஏற்கனவே சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்த செந்தில் - ஸ்ரீஜா, ராஜா ராணி சீசன் 1-ல் நடித்த சஞ்சீவ் - ஆல்யா மானசா, திருமணம் சீரியலில் நடித்த சித்து - ஸ்ரேயா என இந்த லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது.