குக் வித் கோமாளி நிகழ்ச்சி இதுவரை மூன்று சீசன்கள் முடிவடைந்துள்ளது. அதன்படி முதல் சீசனில் வனிதா டைட்டிலை வென்றார். இரண்டாவது சீசனில் கனியும், மூன்றாவது சீசனில் ஸ்ருத்திகாவும் டைட்டிலை ஜெயித்தனர். மூன்று சீசன்களின் ஹாட்ரிக் வெற்றிக்கு பின்னர் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தொடங்கப்பட்டு உள்ளது.
நேற்று முன்தினம், ஆரம்பமான இந்நிகழ்ச்சியில், கடந்த சீசனைக் காட்டிலும் சற்று பிரம்மாண்டமாகவே ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. குக் வித் கோமாளி வெற்றிபெற முக்கிய காரணமே கோமாளிகள் தான். அந்த வகையில் இதற்கு முந்தைய சீசன்களில் இருந்த புகழ், குரேஷி, சுனிதா, மணிமேகலை ஆகியோர் மட்டுமே பழைய கோமாளிகள் மற்ற அனைவருமே புதுமுகங்கள் தான். அதில் முதல் வார நிகழ்ச்சியில் ஜிபி முத்து மட்டும் தான் சற்று கவனம் ஈர்த்தார். மற்றபடி எஞ்சியுள்ள புதிய கோமாளிகள் பெரியளவில் சோபிக்கவில்லை.
இதையும் படியுங்கள்... ரூட்டை மாற்றும் நயன்தாரா! தொடர்ந்து சொதப்பல்... இனி அந்த மாதிரி படங்களுக்கு நோ சொல்ல முடிவு
அதேபோல் குக்குகளை பொறுத்தவரை விசித்ரா, ஷெரின், காளையன், கிஷோர், ஸ்ருஷ்டி டாங்கே, ராஜ் ஐயப்பா, விஜே விஷால், ஆண்ட்ரியன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். மேலும் கடந்த சீசன்களில் கோமாளியாக வந்து கலக்கிய ஷிவாங்கி, இந்த சீசனில் குக் ஆக களமிறங்கி ஆச்சர்யப்படுத்தி உள்ளார். இதுதவிர மேலும் ஒரு சர்ப்ரைஸ் போட்டியாளர் இருப்பதாகவும் ரக்ஷன் ஹிண்ட் கொடுத்திருந்தார்.