குக் ஆக களமிறங்கும் சிவாங்கி.. அஜித்தின் தம்பியும் இருக்காராம்- குக் வித் கோமாளி சீசன் 4 போட்டியாளர்கள் லிஸ்ட்

First Published | Jan 25, 2023, 9:30 AM IST

ரசிகர்களின் மனம் கவர்ந்த ரியாலிட்டி ஷோவான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் போட்டியாளர்களாக கலந்துகொள்பவர்களின் விவரம் வெளியாகி உள்ளது.

சின்னத்திரை ரசிகர்களின் பேவரைட் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று குக் வித் கோமாளி. சீரியஸ் ஆன சமையல் நிகழ்ச்சியை காமெடி கலந்து கலகலப்பாக கொடுப்பதே இந்நிகழ்ச்சியின் ஸ்பெஷல். கொரோனா லாக்டவுன் சமயத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்ச்சி பலரது ஸ்ட்ரெஸ் பஸ்டர் ஷோவாக இருந்ததால் இது குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய அளவில் ரீச் ஆனது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி இதுவரை மூன்று சீசன்கள் முடிவடைந்துள்ளது. இதன் முதல் சீசனில் வனிதா விஜயகுமார் டைட்டிலை வென்றார். இரண்டாவது சீசனில் கனியும், மூன்றாவது சீசனில் ஸ்ருத்திகாவும் டைட்டில் வின்னர் ஆகினர். மூன்று சீசன்கள் ஹாட்ரிக் வெற்றி பெற்ற நிலையில், தற்போது அந்நிகழ்ச்சியின் நான்காவது சீசன் ஆரம்பமாக உள்ளது.

வருகிற ஜனவரி 28-ந் தேதி முதல் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நான்காவது சீசன் ஒளிபரப்பாக உள்ளது. கடந்த சீசன்களில் கோமாளியாக வந்து கலக்கிய புகழ், பாலா, குரேசி ஆகியோர் படங்களில் பிசியானதால் அவர்கள் இந்த சீசனில் கலந்துகொள்வது சந்தேகம் தான் என கூறப்படுகிறது. அவர்களுக்கு பதிலாக சிங்கப்பூர் தீபன், ஜிபி முத்து ஆகியோரை கோமாளிகளாக களமிறக்கி உள்ளனர்.

இதையும் படியுங்கள்... பட்டைய கிளப்பினாரா பாலிவுட் பாட்ஷா?... ஷாருக்கானின் பதான் படம் எப்படி இருக்கு? - விமர்சனம் இதோ

Tap to resize

இந்த சீசனுக்கான புரோமோவில் சிவாங்கியும் இடம்பெறவில்லை என்பதால் அவரும் கலந்துகொள்ளமாட்டார் என ரசிகர்கள் கருதி வந்த நிலையில், தற்போது திடீர் டுவிஸ்ட்டாக அவர் இந்த சீசனில் குக் ஆக களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கோமாளியாக இருக்கும் போதே தனக்கு சமைக்கவே தெரியாது என கூறிவந்த சிவாங்கி, தற்போது குக் ஆக களமிறங்க உள்ள தகவல் பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

ராஜ் ஐயப்பா, ஷெரின், விசித்ரா

இதுதவிர வலிமை படத்தில் நடிகர் அஜித்தின் தம்பியாக நடித்திருந்த ராஜ் ஐயப்பாவும் இந்த சீசனில் குக் ஆக எண்ட்ரி கொடுக்க உள்ளார். அதேபோல் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அசத்திய ஷெரின் மற்றும் ரஜினியுடன் முத்து படத்தில் நடித்த நடிகை விசித்ரா, நாய்சேகர் பட இயக்குனர் கிஷோர், சீரியல் நடிகர் விஜே விஷால் ஆகியோருக்கு குக் ஆக களமிறங்க உள்ளார்களாம்.

இதையும் படியுங்கள்... திரும்ப வந்துட்டேன்னு சொல்லு! டுவிட்டர் பக்கம் மீட்பு... மீண்டும் அதிரடி காட்ட தயாரான கங்கனா ரனாவத்

Latest Videos

click me!