எத்தனை சீரியல் வந்தாலும்... எதிர்நீச்சலுக்கு மவுசு குறையாதது ஏன்?

First Published | Feb 23, 2023, 11:16 AM IST

தேவையானி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற கோலங்கள் என்கிற நெடுந்தொடரை இயக்கிய திருச்செல்வம் தான் எதிர்நீச்சல் சீரியலையும் இயக்கி வருகிறார்.

சின்னத்திரை சீரியல்களுக்கு நாளுக்கு நாள் மவுசு அதிகரித்த வண்ணம் உள்ளன. முன்பெல்லாம் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை ஒளிபரப்பப்பட்டு வந்த சீரியல்கள் தற்போது சனிக்கிழமையையும் ஆக்கிரமித்துவிட்டன. அந்த அளவுக்கு அதன் மீதான மோகம் அதிகரித்துவிட்டது. ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றார்போல் வித்தியாசமான கதைக்களங்களுடன் பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.

அதிலும் குறிப்பாக தற்போது டிரெண்டிங்கில் உள்ளது எதிர்நீச்சல் சீரியல் தான். இந்த சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலை இயக்குனர் திருச்செல்வம் இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே தேவையானி நடித்து மெகா ஹிட் ஆன கோலங்கள் என்கிற தொலைக்காட்சி தொடரை இயக்கியவர் ஆவார். தற்போது பல ஆண்டுகளுக்கு பின் எதிர்நீச்சல் சீரியல் மூலம் கம்பேக் கொடுத்துள்ளார். 

இதையும் படியுங்கள்... மாலத்தீவில் ‘மால டம் டம்... மஞ்சர டம் டம்’னு கவர்ச்சி பொங்க ஆட்டம் போடும் மிருணாளினி - வைரலாகும் ஹாட் போட்டோஸ்

Tap to resize

எதிர்நீச்சல் சீரியலுக்கு போட்டியாக மேலும் இரண்டு புது சீரியல்களையும் களமிறக்குகிறது சன் டிவி. அதன்படி மலர், மிஸ்டர் மனைவி என இரண்டு புது சீரியல்கள் விரைவில் ஒளிபரப்பாக உள்ளன. இதில் மலர் சீரியலில் சித்தி 2 தொடரின் நாயகி ப்ரீத்தி ஷர்மாவும், மிஸ்டர் மனைவி சீரியலில் செம்பருத்தி புகழ் ஷபானாவும் நாயகிகளாக நடிக்கின்றனர். 

இரண்டு சீரியல்களின் முன்னோட்ட வீடியோக்கள் வெளியாகி வரவேற்பை பெற்றாலும், இது எதிர்நீச்சல் சீரியல் அளவுக்கு இல்லை என்கிற கருத்தை தான் ரசிகர்கள் அதிகளவில் கூறி வருகின்றனர். இப்படி எதிர்நீச்சல் சீரியல் மக்களிடம் மவுசு குறையாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் அதன் விறுவிறுப்பாக திரைக்கதை தான் என கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி அதில் ஏராளமான அனுபவம் வாய்ந்த நடிகர், நடிகைகளும் நடித்து வருவதும் அந்த சீரியலின் பலமாக பார்க்கப்படுகிறது. 

இதையும் படியுங்கள்... காந்தாரா 2-வில் நடிக்கிறாரா ரஜினிகாந்த்..? இயக்குனர் ரிஷப் ஷெட்டி கொடுத்த அல்டிமேட் ஹிண்ட்

Latest Videos

click me!