தென்னிந்திய திரையுலகில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட நடிகர்களில் ஒருவர் விஜய். இவர் எது செய்தாலும் அதனை அவரது ரசிகர்கள் வைரலாக்கி விடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். அதே போல் அவருடைய குடும்பத்தினர் குறித்து ஏதேனும் தகவல் வெளியானால் சொல்லவா வேண்டும்? வழக்கம் போல் அந்த செய்தியையும் ட்ரெண்ட் செய்து விடுவார்கள்.
26
இந்நிலையில் முதல் முறையாக விஜய்யின் பாட்டியோடு, அவருடைய தந்தை எஸ் ஏ சி வெளியிட்டுள்ள புகைப்படம் தான், ரசிகர்கள் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மதுரையில் வசித்து வரும் தன்னுடைய சித்தியை பார்க்க எஸ் ஏ சி சென்றபோது... எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 103 வயதிலும், மிகவும் ஆரோக்கியமாக தன்னுடைய மகனுடன் அவர் சிரித்து பேசியது மட்டும் இன்றி... ஆசீர்வதித்துள்ளார். இந்த அரிய புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
46
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக அறியப்படும் எஸ் ஏ சி, தன்னுடைய மகன் விஜய்யுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பேசுவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இருவரையும் சமாதானம் செய்யும் முயற்சியில் கூட சிலர் இறங்கியதாக கூறப்பட்ட நிலையில் அதுவும் தோல்வியில் தான் முடிந்துள்ளது.
தன்னுடைய ஒரே பிள்ளையான விஜய் சில வருடங்களாக பேசுவது இல்லை, என்று மனசு முழுக்க வலி இருந்தாலும்... அதனை வெளியே காட்டி கொள்ளாமல், மற்ற பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் கூட இமயமலை, ரிஷிகேஷ், போன்ற இடங்களுக்கு தன்னுடைய துணை இயக்குனர்களுடன் ஆன்மீக பயணம் மேற்கொண்ட இவர், தற்போது தன்னுடைய உறவினர்களை சந்தித்து வருகிறார்.
66
எஸ்.ஏ.சி தன்னுடைய சின்னமாவுடன் எடுத்து கொண்ட புகைப்படம் விஜய் ரசிகர்கள் மத்தியில் மட்டும் இன்றி, அனைத்து தரப்பு ரசிகர்களாலும் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.