நடிகை சமந்தா மயோசிடிஸ் என்கிற அரியவகை தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதற்காக கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்ததாக சமீபத்தில் யசோதா படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது அவர் கூறி கண்கலங்கினார். அப்படத்தின் டப்பிங்கை கூட அவர் மருத்துவமனையில் இருந்தபடி செய்த புகைப்படங்கள் வெளியாகியது.
இந்த நிலையில், மற்றுமொரு அதிர்ச்சி சம்பவம் நடிகை சமந்தாவை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. அது என்னவென்றால், அவர் நடிப்பில் கடந்த நவம்பர் 11-ந் தேதி திரையரங்கில் ரிலீசாகி வெற்றிபெற்ற யசோதா திரைப்படத்தை ஓடிடி-யில் ரிலீஸ் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது. இப்படத்தில் வாடகைத் தாய் முறை பற்றி விவாதிக்கப்பட்டு இருந்தது.