‘சிட்டிசன்’ கமல் நடிக்க வேண்டிய படம்.. அந்த வாய்ப்பு அஜித்துக்கு போனது எப்படி? - இயக்குனர் சொன்ன ஆச்சர்ய தகவல்

First Published | Nov 24, 2022, 8:51 AM IST

‘சிட்டிசன்’ படத்தின் கதையை முதன்முதலில் தான் நடிகர் கமல்ஹாசனுக்கு தான் சொன்னதாகவும், அவரால் நடிக்க முடியாமல் போனது ஏன் என்பது குறித்தும் இயக்குனர் சரவணன் சுப்பையா தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உள்ள நடிகர்களில் நடிகர் அஜித்தும் ஒருவர். அவர் தனது சினிமா கெரியரில் பல்வேறு ஏற்றத்தாழ்வுகளை சந்தித்து இருந்தாலும், தனது விடாமுயற்சியால் தான் இன்று வரை மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து இருக்கிறார். நடிகர் அஜித்தின் சினிமா வாழ்க்கையில் 2001-ம் ஆண்டு மிக முக்கியமான ஒன்று.

ஏனெனில் அந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான தீனா, சிட்டிசன், பூவெல்லாம் உன் வாசம் ஆகிய மூன்று படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதோடு, அஜித்தின் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதிலும் குறிப்பாக அவர் நடித்த சிட்டிசன் திரைப்படம் அவரது சினிமா பயணத்தில் ஒரு முக்கியமான படமாக இருந்து வருகிறது.

அப்படத்தை சரவணன் சுப்பையா இயக்கி இருந்தார். அப்படத்தில் நடிகர் அஜித், பல்வேறு விதமான கெட் அப்களில் நடித்து ஆச்சர்யப்படுத்தி இருந்தார். தங்களது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அத்திப்பட்டி என்கிற கிராமத்தையே அழித்த அதிகாரிகளை பழிவாங்கும் சிட்டிசன் கதாபாத்திரத்தில் மிட்டலான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி இருந்தார்.

இதையும் படியுங்கள்... நான் முஸ்லீம், என் மனைவி பிராமணர்.. 3 முறை திருமணம் செய்துகொண்டது ஏன்? - ஜெயம் ரவியின் தந்தை சுவாரஸ்ய பேட்டி

Tap to resize

ஆனால் முதன்முதலில் இப்படத்தில் நடிக்க இருந்தது அஜித் இல்லையாம். இப்படத்தில் நடிக்க இயக்குனர் சரவணன் சுப்பையா முதன்முதலில் அணுகியது நடிகர் கமல்ஹாசனைத் தானாம். கமல் கெட் அப் மாற்றி நடிப்பதில் கில்லாடி என்பதனால், அவரை இப்படத்தில் நடிக்க அணுகியபோது, அவருக்கு கதை மிகவும் பிடித்துப் போனதாம்.

ஆனால் அந்த சமயத்தில் ஹேராம் படத்தை அவர் இயக்கிக் கொண்டிருந்ததால், அதை முடித்துவிட்டு வரும் வரை காத்திருக்குமாறு கூறி இருந்தாராம் கமல். ஆனால் ஹேராம் படம் முடிய லேட் ஆனதால், கமலிடம் கூறிவிட்டு அஜித்தை நடிக்க வைத்ததாக சரவணன் சுப்பையா தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி சிட்டிசன் படத்தில் அஜித்தின் கெட் அப் மாற்றத்திற்காக உதவியதும் கமல் தான் என்கிற சுவாரஸ்ய தகவலையும் அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்... 'எதிர் நீச்சல்' சீரியலில் இருந்து விலகிய முக்கிய பிரபலம்? கமிட்டான 'பாரதி கண்ணம்மா' சீரியல் நடிகர்!

Latest Videos

click me!