இயக்குனர் ஷங்கரிடம் எந்திரன், நண்பன் போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் அட்லீ. இவர் கடந்த 2013-ம் ஆண்டு ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் வெளியான ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதை அடுத்து நடிகர் விஜய்யின் தெறி படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார் அட்லீ.
இவ்வாறு இயக்குனர் அட்லீ சக்சஸ்புல் இயக்குனராக இருந்தாலும், அவர் இயக்கும் படங்கள் கதை திருட்டு சர்ச்சையில் தொடர்ந்து சிக்கி வருகின்றன. அதன்படி அவரது ராஜா ராணி படம் மெளன ராகம் படத்தின் காப்பி என்றும், தெறி படத்தின் கதை விஜயகாந்தின் சத்ரியன் பட கதையோடு ஒத்து இருந்ததாகவும், மெர்சல் படம் ரஜினியின் மூன்று முகம் மற்றும் கமலின் அபூர்வ சகோதரர்கள் போன்ற படங்களோடு ஒப்பிட்டு பேசப்பட்டது.
அந்த வகையில் அட்லீ இயக்கத்தில் தற்போது பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடித்து வரும் ஜவான் படமும் அண்மையில் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியது. அதன்படி விஜயகாந்த் நடிப்பில் வெளியான பேரரசு படத்தின் கதையை திருடி தான் அட்லீ ஜவான் படத்தை எடுத்து வருவதாக தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுக்கப்பட்டு இருந்தது.
இதுகுறித்து விசாரணை நடத்திய தயாரிப்பாளர் சங்கம் அட்லீயின் ஜவான் படத்தின் கதையும், பேரரசு படத்தின் கதையும் ஒன்றல்ல என்பதை உறுத் செய்தது. இதன்மூலம் அட்லீ மீதான கதை திருட்டு புகார் பொய் என்பதை நிரூபித்துக் காட்டி இருக்கிறார் அட்லீ. ஜவான் திரைப்படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... ஒரு பக்கம் உடல்நலக்குறைவு... மறுபக்கம் படத்துக்கு தடை - அடுத்தடுத்த அதிர்ச்சியால் சோகத்தில் சமந்தா..!