குடும்பத்துடன் வெக்கேஷன்:
நடிகர் ஸ்ரீகாந்த் மனைவி வந்தனா, தன்னுடைய குடும்பத்துடன் தாய்லாந்துக்கு வெக்கேஷன் சென்றுள்ள புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார்.
அடுத்தடுத்த தோல்வி:
ஆனால் அவர் அறிமுகமான சமயத்தில் அடுத்தடுத்து... ஹிட் படங்களை கொடுத்தது போல் ஏனோ இப்போது இவரால் ஒரு ஹிட் படத்தை கொடுக்க கூட முடியவில்லை.
ட்ராக் மாறிய ஹீரோ:
மேலும் கடந்த சில வருடங்களாகவே ஹீரோவாக நடித்து வந்த படங்கள் தோல்வியடைந்ததால், கிடைத்த வாய்ப்பில் நடிக்க முடிவு செய்து ஹீரோ ட்ராக்கை விட்டு விலகி, வில்லன்.. மற்றும் குணச்சித்திர நடிகராக மாறிவிட்டார்.
வளர்ந்து விட்ட பிள்ளைகள்:
குறிப்பாக ஸ்ரீகாந்த் - வந்தனா ஜோடிக்கு, தோலுக்கு மேல் வளர்ந்த பிள்ளைகள் என்றால் யார் நம்புவார்கள். இவர்களின் புகைப்படங்களும் சமீப காலமாக அடிக்கடி வெளியாகி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி வருகிறது.
வைரல் போட்டோஸ்:
இந்த ஜோடி தற்போது தாய்லாந்துக்கு குழந்தைகளுடன் சுற்றுலா சென்றுள்ள புகைப்படங்களை ஸ்ரீகாந்த் மனைவி வந்தனா தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் வெளியிட படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.