சமீபத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியாகி தற்போது வரை, சில திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் 'பொன்னியின் செல்வன் 2' . இந்த படத்தில், வந்திய தேவன் கதாபாத்திரத்தில் கார்த்தி, நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். பல ரசிகர்கள் வந்திய தேவன் கதாபாத்திரத்தில் கார்த்தியின் நடிப்பை பார்த்து, இவரை தவிர வேறு யாரும், இவ்வளவு நேர்த்தியாக இந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்க மாட்டார்கள் என கூறி இருந்தனர்.