சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவை விட 3 மடங்கு அதிக சம்பளம் கேட்ட தீபிகா படுகோனே... ஆடிப்போன படக்குழு

Published : May 17, 2023, 02:24 PM IST

கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாக உள்ள எஸ்.டி.ஆர் 48 படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க தீபிகா படுகோனே கேட்ட சம்பளத்தால் படக்குழு வாயடைத்துப் போய் உள்ளதாம்.

PREV
14
சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவை விட 3 மடங்கு அதிக சம்பளம் கேட்ட தீபிகா படுகோனே... ஆடிப்போன படக்குழு

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவர் உடல் எடையை குறைத்த பின்னர் அடுத்தடுத்து மாநாடு, வெந்து தணிந்தது காடு என பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்து வெற்றிநாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் எஸ்.டி.ஆர்.48. இப்படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கி வருகிறார்.

24

வரலாற்று கதையம்சம் கொண்ட படமாக இது உருவாக உள்ளது. இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தை சுமார் ரூ.100 கோடி பட்ஜெட்டில் தயாரிக்க கமல் திட்டமிட்டுள்ளாராம். இப்படத்திற்காக தாய்லாந்து சென்று பிரத்யேக பயிற்சி மேற்கொண்டுள்ள சிம்பு, தன் தோற்றத்தையும் மாற்றி இருக்கிறார். இப்படத்தை பான் இந்தியா படமாக தயாரிக்க திட்டமிட்டு அதில் பாலிவுட் நடிகையை ஹீரோயினாக நடிக்க வைக்க திட்டமிட்டு இருந்தனர்.

இதையும் படியுங்கள்... காட்டுப் பசியில் இருந்தாலும்.... கம்மி சம்பளம் போதும்னு சொல்லி கமலுக்கு ஷாக் கொடுத்த சிம்பு..!

34

அதன்படி பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் தீபிகா படுகோனேவை சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க வைக்க முடிவெடுத்த படக்குழு, அவரை அணுகியதாம். கதை அவருக்கு பிடித்திருந்தாலும், சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க அவர் கேட்ட சம்பளம் தான் படக்குழுவை ஜெர்க் ஆக்கி உள்ளது. மாநாடு, வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றிக்கு பின்னர் சிம்பு தன் சம்பளத்தை ரூ.40 கோடியாக உயர்த்திவிட்டார். கமல் தன்னுடைய குரு என்பதால் அவர் தயாரிக்கும் படத்துக்காக சிம்பு சம்பளத்தை குறைத்துக் கொண்டார்.

44

ஆனால் தீபிகா படுகோனே, சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க ரூ.30 கோடி சம்பளமாக கேட்டுள்ளாராம். அதுமட்டுமின்றி தான் படப்பிடிப்புக்கு வந்தால் 5 ஸ்டார் ஹோட்டலில் தான் தங்குவேன். தான் தங்கி இருக்கும் தளம் முழுக்க தனக்காக ஒதுக்கப்பட வேண்டும் என அடுக்கடுக்கான கண்டிஷன்களையும் போட்டுள்ளாராம். இதைக்கேட்டு ஆடிப்போன படக்குழு வேறு ஹீரோயினை நடிக்க வைக்கலாமா என்கிற முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாராவே ஒரு படத்துக்கு ரூ.10 கோடி தான் சம்பளமாக வாங்குகிறார். ஆனால் தீபிகா படுகோனே அவரைவிட 3 மடங்கு சம்பளம் கேட்டுள்ளது தற்போது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள்... பிச்சைக்காரன் 2 முதல் மாடர்ன் லவ் சென்னை வரை... இந்தவார தியேட்டர் & ஓடிடி ரிலீஸ் என்னென்ன? முழு லிஸ்ட் இதோ

Read more Photos on
click me!

Recommended Stories