உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர் நடிகை லாவண்யா திரிபாதி. இவரை பிரபலமாக்கியது தெலுங்கு சினிமா தான். தெலுங்கில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான அண்டல ராக்ஷசி என்கிற படம் மூலம் நடிகையாக காலடி எடுத்து வைத்தார் லாவண்யா. இதையடுத்து சசிகுமார் நடிப்பில் கடந்த 2014-ம் ஆண்டு ரிலீஸ் ஆன பிரம்மன் திரைப்படம் மூலம் தமிழில் எண்ட்ரி கொடுத்த அவருக்கு, தெலுங்கில் அடுத்தடுத்து பட வாய்ப்பு குவிந்ததால், அங்கு செட்டிலானார்.
தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகரான வருண் தேஜை தான் நடிகை லாவண்யா திரிபாதி காதலித்து வருகிறாராம். இவர்கள் இருவரும் கடந்த 2017-ம் ஆண்டு ரிலீஸ் ஆன மிஸ்டர் படத்திலும், கடந்த 2018-ல் வெளிவந்த அந்தாரிக்ஷம் படத்திலும் ஜோடியாக நடித்திருந்தனர். அப்போதே இவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாக கிசுகிசுக்கள் வந்தன. ஆனால் இதைப்பற்றி இருவரும் எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் இருந்து வந்தனர்.