ஓடிடி தளங்களுக்கு டஃப் கொடுக்க தயாராகும் ஜியோ சினிமா... ஐபிஎல் முடிந்ததும் விஷ்ணு விஷாலின் படம் நேரடி ரிலீஸ்

First Published | May 17, 2023, 8:51 AM IST

ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பி வரும் ஜியோ சினிமா ஓடிடி தளம், அடுத்ததாக விஷ்ணு விஷாலின் திரில்லர் படத்தை நேரடியாக ரிலீஸ் செய்ய உள்ளதாம்.

கொரோனா ஊரடங்கு சமயத்தில் பெரும்பாலான தொழில்கள் நஷ்டத்தை சந்தித்தாலும், அந்த நேரத்தில் ஓஹோன்னு வளர்ச்சி கண்டது ஓடிடி தளங்கள் தான். ஓடிடி தளங்களின் வளர்ச்சியை கொரோனாவுக்கு முன், பின் என பிரித்துவிடலாம். அந்த அளவுக்கு அவை அசுர வளர்ச்சி கண்டுள்ளன. ஊரடங்கு சமயத்தில் திரையரங்குகள் மூடப்பட்டு இருந்ததால், படங்களை நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் செய்யும் நிகழ்வுகளும் அரங்கேறின.

ஏற்கனவே ஹாட்ஸ்டார், நெட்பிளிக்ஸ், சோனி லிவ், ஆஹா, அமேசார் பிரைம் என பலவேறு ஓடிடி தளங்கள் உள்ள நிலையில், இவற்றுக்கெல்லாம் டஃப் கொடுக்க பக்கா பிளான் உடன் களமிறங்கி உள்ளது ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ சினிமா ஓடிடி தளம். அந்த ஓடிடி தளம் பல ஆண்டுகளாக இருந்தாலும், பெரிய அளவில் ரீச் இல்லாமல் இருந்தது. அதில் ஐபிஎல் இலவசமாக பார்க்கலாம் என்கிற அறிவிப்பை வெளியிட்டு ஒரே மாதத்தில் படு வேகமாக வளர்ந்துவிட்டது அந்த ஓடிடி தளம்.

இதையும் படியுங்கள்... ரஜினிக்கு வில்லனாக நடிக்க இத்தனை கோடி சம்பளமா? கோலிவுட் திரையுலகையே வியக்க வைத்த சீயான் விக்ரம்!

Tap to resize

தற்போது ஐபிஎல் முடிய உள்ளதால், தனது அடுத்தக்கட்ட நகர்வுகளை மேற்கொள்ள தொடங்கி உள்ளது ஜியோ சினிமா நிறுவனம். அதன்படி அந்நிறுவனம் திரைப்படங்களை நேரடியாக ரிலீஸ் செய்யும் ஐடியாவில் உள்ளது. அதன்படி முதலாவதாக விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி இருக்கும் மோகன்தாஸ் என்கிற திரில்லர் படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றியுள்ள அந்நிறுவனம் அப்படத்தை நேரடியாக தங்கள் ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யும் முடிவில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மோகன்தாஸ் திரைப்படத்தை புதுமுக இயக்குனர் முரளி கார்த்திக் இயக்கி உள்ளார். இப்படத்தில் விஷ்ணு விஷால் நாயகனாக நடித்துள்ளதோடு, தனது விவி ஸ்டூடியோஸ் நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரித்தும் உள்ளார். இதில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். சைக்கோ திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்திற்கு கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைத்து உள்ளார். கொரோனா பரவல் குறைந்து படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில், இப்படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ள தகவல் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படியுங்கள்... ’பிச்சைக்காரன்2' திரைப்படம் சசி சார் எனக்கு போட்ட பிச்சை! விஜய் ஆண்டனி எமோஷ்னல் பேச்சு - வீடியோ!

Latest Videos

click me!