அந்த கேரக்டர் மட்டும் எனக்கு கிடைச்சிருந்தா ராஷ்மிகாவ விட நல்லா நடிச்சிருப்பேன்- ஐஸ்வர்யா ராஜேஷ் சர்ச்சைபேச்சு

First Published | May 17, 2023, 9:53 AM IST

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகை ராஷ்மிகா மந்தனா பற்றி பேசி உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தொகுப்பாளினியாக தன் பயணத்தை தொடங்கிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், பின்னர் படிப்படியாக சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். இவரை அடையாளப்படுத்திய திரைப்படம் அட்டக்கத்தி. கடந்த 2012-ம் ஆண்டு வெளியான இப்படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்திருந்தார். இதையடுத்து ஹீரோயினாக தான் நடிப்பேன் என்று கண்டிஷன் போடாமல் துணிச்சலாக காக்கா முட்டை படத்தில் அம்மா கேரக்டரில் நடித்தார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

ஐஸ்வர்யா ராஜேஷுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது காக்கா முட்டை திரைப்படம். இதையடுத்து தர்மதுரை, கனா, நம்ம வீட்டு பிள்ளை, கபெ ரணசிங்கம் என தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து அசத்தினார் ஐஸ்வர்யா ராஜேஷ். தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் அதிகளவில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். கடந்த 5 மாதங்களில் மட்டும் இவர் நடித்த 5 படங்கள் ரிலீஸ் ஆகிவிட்டன. இதில் 4-ல் கதையின் நாயகியாக நடித்திருந்தார் ஐஸ்வர்யா.

இதையும் படியுங்கள்... ஓடிடி தளங்களுக்கு டஃப் கொடுக்க தயாராகும் ஜியோ சினிமா... ஐபிஎல் முடிந்ததும் விஷ்ணு விஷாலின் படம் நேரடி ரிலீஸ்

Tap to resize

தற்போது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள ஃபர்ஹானா திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ள இப்படத்தில் இஸ்லாமிய பெண்ணாக நடித்துள்ளார் ஐஸ்வர்யா. ரிலீசுக்கு முன் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்த இப்படம் தற்போது பாசிடிவ் விமர்சனங்களை பெற்று திரையரங்குகளில் வெற்றிநடைபோட்டு வருகிறது. இதன் புரமோஷன் நிகழ்ச்சியின் போது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியது தற்போது சர்ச்சையில் சிக்கி உள்ளது.

அதன்படி அதில், விஜய் தேவரகொண்டாவுடன் தான் நடித்த வேர்ல்டு பேமஸ் லவ்வர் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாதது தனக்கு வருத்தம் அளிப்பதாகடும், நல்ல தெலுங்கு படங்களில் நடிக்க வேண்டும் என தனக்கு ஆசை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் புஷ்பா படத்தில் ராஷ்மிகா நடித்த ஸ்ரீவள்ளி கேரக்டர் தனக்கு கிடைத்தால் நிச்சயம் நடித்திருப்பேன் என கூறிய அவர், அந்த கேரக்டரில் ராஷ்மிகா அருமையாக நடித்திருந்தாலும், அது தனக்கு கிடைத்திருந்தால் நிச்சயம் அவரைவிட சூப்பராக நடிச்சிருப்பேன். அது தனக்கு பொருத்தமான கேரக்டர் என பேசி இருந்தார். அவரின் இந்த பேச்சு தான் தற்போது சர்ச்சையில் சிக்கி உள்ளது.

இதையும் படியுங்கள்...  ’பிச்சைக்காரன்2' திரைப்படம் சசி சார் எனக்கு போட்ட பிச்சை! விஜய் ஆண்டனி எமோஷ்னல் பேச்சு - வீடியோ!

Latest Videos

click me!