தியேட்டரில் ரிலீசாகும் படங்கள்
பிச்சைக்காரன் 2
விஜய் ஆண்டனி தயாரித்து, இயக்கி, இசையமைத்து, நடித்துள்ள பிச்சைக்காரன் 2 திரைப்படம் வருகிற மே 19-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக காவ்யா தப்பார் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, தேவ் கில், ஜான் விஜய், மன்சூர் அலிகான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனி இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி உள்ளார்.
ஓடிடியில் ரிலீசாகும் படங்கள்
தமிழில் மகத், சந்தோஷ் பிரதாப், வரலட்சுமி சரத்குமார், ஆரவ் ஆகியோர் நடித்துள்ள மாருதிநகர் போலீஸ் ஸ்டேஷன் திரைப்படம் வருகிற மே 19-ந் தேதி நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது. தயாள் பத்மநாபன் இப்படத்தை இயக்கி உள்ளார். கிரைம் திரில்லர் படமாக இது தயாராகி உள்ளது. இதுதவிர விமலின் தெய்வமச்சான் திரைப்படம் சிம்ப்ளி சவுத் ஓடிடி தளத்திலும், மஞ்சு வாரியர் நடித்த செண்டிமீட்டர் திரைப்படம் டெண்ட்கொட்டா ஓடிடியிலும் ரிலீஸ் ஆக உள்ளது.