லால் சலாம் படப்பிடிப்பில் அப்பாவை அப்செட் ஆக்கிய ஐஸ்வர்யா... மகளுடன் ரஜினி மோதலா?

Published : May 17, 2023, 03:43 PM IST

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு நடிகர் ரஜினிகாந்துக்கு திருப்தி அளிக்காததால் அவர் அப்செட் ஆகி உள்ளாராம்.

PREV
15
லால் சலாம் படப்பிடிப்பில் அப்பாவை அப்செட் ஆக்கிய ஐஸ்வர்யா... மகளுடன் ரஜினி மோதலா?

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா, 3 மற்றும் வை ராஜா வை போன்ற படங்களை இயக்கி உள்ளார். இவர் இயக்கத்தில் தற்போது லால் சலாம் திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகும் இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தில் நடிகர்கள் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் கதையின் நாயகர்களாக நடித்து வருகின்றனர்.

25

லால் சலாம் படத்தில் நடிகர் ரஜினிகாந்தும் கெஸ்ட் ரோலில் நடிக்க கமிட் ஆகி உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. இதன் முதற்கட்ட படப்பிடிப்பை திருவண்ணாமலையில் நடத்திய படக்குழு, அடுத்தக்கட்ட படப்பிடிப்பை மும்பையில் நடத்த உள்ளதாக அறிவித்ததோடு, அதில் ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகளை படமாக்க உள்ளதாகவும் அறிவித்தனர்.

35

அதுமட்டுமின்றி ரஜினிகாந்த் இப்படத்தில் மொய்தீன் பாய் என்கிற முஸ்லீம் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும், அவரின் முதல் தோற்றம் அடங்கிய போஸ்டரையும் வெளியிட்டு இருந்தனர். இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் மிகவும் மோசமாக எடிட் செய்யப்பட்டு இருந்ததால் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டது. இதையடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பை கடந்த வாரம் மும்பையில் படமாக்கத் தொடங்கினார் ஐஸ்வர்யா.

இதையும் படியுங்கள்... சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவை விட 3 மடங்கு அதிக சம்பளம் கேட்ட தீபிகா படுகோனே... ஆடிப்போன படக்குழு

45

அங்கு 2 வாரங்கள் ஷூட்டிங் நடக்கும் என கூறப்பட்ட நிலையில், 5 நாட்களிலேயே மும்பையில் இருந்து சென்னை கிளம்பி வந்துவிட்டாராம் ரஜினிகாந்த். ரஜினி நடித்த காட்சிகள் 3 நாட்கள் மட்டுமே படமாக்கப்பட்டு உள்ளது. 4-வது நாள் ஷூட்டிங்கிற்கு ரஜினி வந்தாலும் படப்பிடிப்பு நடக்கவில்லையாம். ஏனெனில் அவருடன் நடிக்கும் நடிகர் வராததால் படப்பிடிப்பு நடத்த முடியாத சூழல் உருவானதாம். அடுத்த நாளும் இதே நிலை நீடித்ததால் அப்செட் ஆன ரஜினி சென்னைக்கு கிளம்பி வந்துவிட்டாராம்.

55

இதையடுத்து தற்போது லால் சலாம் படக்குழு டெல்லி சென்று அங்கு சில காட்சிகளை படமாக்கி வருகிறதாம். ரஜினிகாந்தின் எஞ்சியுள்ள காட்சிகளை சென்னையில் செட் போட்டு படமாக்க திட்டமிட்டுள்ளாராம் ஐஸ்வர்யா. மகளின் மெத்தனப்போக்கால் ரஜினிகாந்த் அவர் மீது கோபத்தில் உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.

இதையும் படியுங்கள்...  பிச்சைக்காரன் 2 முதல் மாடர்ன் லவ் சென்னை வரை... இந்தவார தியேட்டர் & ஓடிடி ரிலீஸ் என்னென்ன? முழு லிஸ்ட் இதோ

Read more Photos on
click me!

Recommended Stories