பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன் நடிப்பில் வெளியான படம் முதல்வன். அர்ஜுன், மனிஷா கொய்ராலா, ரகுவரன், மணிவண்ணன், வடிவேலு உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர். 1999-ம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு ரிலீஸான இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது.