மனைவியை தொடர்ந்து இயக்குனர் நெல்சனுக்கு செக்! தனிப்படை போலீசார் தீவிர விசாரணை!

Published : Aug 24, 2024, 12:36 PM IST

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக, ஏற்கனவே நெல்சன் மனைவி மோனிஷாவிடம் விசாரணை செய்த போலீசார் தற்போது இயக்குனர் நெல்சனிடமும் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.  

PREV
15
மனைவியை தொடர்ந்து இயக்குனர் நெல்சனுக்கு செக்! தனிப்படை போலீசார் தீவிர விசாரணை!
Armstrong Murder

கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி,  வெட்டி படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
 

25
Police Investigations

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குறித்து விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை இந்த படுகொலை தொடர்பாக 20-திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளியான மொட்டை கிருஷ்ணன் என்கிற வழக்கறிஞர் இந்தியாவில் இருந்து தப்பி வெளிநாடு சென்றுள்ளதால், அவருக்கு லுக் அவுட் நோட்டீசும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வசூலில் மாரியை வென்றாரா சூரி? கொட்டுக்காளி படத்தின் முதல் நாள் வசூல் விவரம்!
 

35
Nelson Dilipkumar Wife Monisha

இந்நிலையில் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற மொட்டை கிருஷ்ணனுடன், பிரபல இயக்குனர் நெல்சனின் மனைவி மோனிஷா போனில் பேசியதாக கிடைத்த ஆதாரத்தின் பெயரில், இவருக்கும் ஆர்ம்ஸ்ட்ராங் கொலைக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா?  என்கிற கோணத்தில் தனிப்படை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

45
Police Investigate to Monisha

இதைத்தொடர்ந்து மோனிஷா வங்கி கணக்கில் இருந்து, மொட்டை கிருஷ்ணனின் வங்கி கணக்கிற்கு சுமார் 75 லட்சம் பரிமாற்றப்பட்டதாக தகவல்  ஒன்று பரவிய நிலையில், இதற்கு மோனிஷா தரப்பில் இருந்து 'இது முற்றிலும் ஆதாரமற்ற தகவல் என்றும், இந்த பொய்யான தகவலை அனைத்து பகுதிகளில் இருந்தும் நீக்கம் செய்ய வேண்டும் என வழக்கறிஞர் மூலம் விளக்கம் கொடுக்கப்பட்டிருந்தது".

மாரி செல்வராஜின் 'வாழை' ரசிகர்கள் மனதை வென்றதா? முதல் நாள் வசூல் விவரம்!
 

55
Nelson Dilipkumar

இது ஒரு புறம் இருக்க, தற்போது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக இயக்குனர் நெல்சனிடமும் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு பெறுவதாக கூறப்படுகிறது. இயக்குனர் நெல்சன் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் மொட்டை கிருஷ்ணனின் நண்பர் என்பதால், அவர் மூலம் ஏதேனும் தகவல் கிடைக்குமா? என்கிற காரணத்திற்க்காக இந்த  விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த தகவல் கோலிவுட் வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

click me!

Recommended Stories