நடிகர் சூரி, சிவகார்த்திகேயன் தயாரிப்பில் நடித்து நேற்று வெளியான, 'கொட்டுக்காளி' திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
'கூழாங்கல்' படத்தின் மூலம் கடந்த 2021 ஆம் ஆண்டு இயக்குனராக.. தமிழ் சினிமாவில் அவதாரம் எடுத்த இயக்குனர் பி எஸ் வினோத் ராஜ் இயக்கத்தில் உருவாக்கியுள்ள இரண்டாவது திரைப்படம் கொட்டுக்காளி. இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் காலை அரசு இணைந்து தயாரிக்க சூரி மற்றும் அன்னா பென் லீடு ரோலில் நடித்துள்ளனர்.
24
Kottukkaali in Berlin
இந்த திரைப்படம் 'தி அட்மென்ட் கேர்ள்' என்கிற பெயரில் கடந்த பிப்ரவரி மாதம் 16ஆம் தேதி, பெர்லின் இன்டர்நேஷனல் திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டு விருதுகளை வென்றது. இதுவரை தமிழ் சினிமாவில் வெளியான திரைப்படங்களில் வித்தியாசமான பார்வையோடு எந்த ஒரு பின்னணி இசையும் இல்லாமல் எடுக்கப்பட்ட இந்த படத்தின் டிரைலர், போஸ்டர் போன்றவை... படம் மீதான எதிர்பார்ப்பை தூண்டிய நிலையில், இப்படம் வெளியாகி கண்டிப்பாக கூறிய அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என சிவகார்த்திகேயன் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
இப்படம் வெளியானது முதலே... ஒரு தரப்பினர் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களையும் மற்றும் தரப்பினர் மத்தியில் நெகட்டிவ் விமர்சனங்களையும் பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
44
Kottukkaali Day 1 Collection
அதன்படி நேற்று வெளியான இயக்குனர் மாரி செல்வராஜின் 'வாழை' திரைப்படம் ஒன்றரை கோடி வசூலை எட்டியதாக கூறப்பட்ட நிலையில், சூரியின் கொட்டுக்காளி திரைப்படம் ஒரு 50 லட்சம் முதல் 1 கோடிக்குள் தான் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் என்பதால் இப்படத்தின் வசூல் அதிகரிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.