மாரி செல்வராஜின் 'வாழை' ரசிகர்கள் மனதை வென்றதா? முதல் நாள் வசூல் விவரம்!

First Published | Aug 24, 2024, 9:03 AM IST

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், நேற்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'வாழை' இந்த படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
 

Mari Selvaraj

கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான, 'பரியேறும் பெருமாள்' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். இதை தொடர்ந்து, தனுஷை வைத்து 'கர்ணன்', உதயநிதியை வைத்து 'மாமன்னன்' ஆகிய படங்களை இயக்கினார். தற்போது 'வாழை' என்கிற திரைப்படத்தை இயக்கிய நிலையில், இப்படம் நேற்று சுமார் 500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது.
 

Vaazhai Movie

தன்னுடைய இளம் வயதில் சந்தித்த பிரச்சனைகளை மையமாக வைத்தே இந்த படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கி உள்ளார். இந்த படத்தின் திரைக்கதை பொன்வேல் என்கிற சிறுவனை சுற்றியே பின்னப்பட்டுள்ளது. மேலும் நடிகர் கலையரசன் மற்றும் நிகிலா விமல் லீடு ரோலில் நடிக்க, திவ்யா துரைசாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

எல்லாம் என்னுடையது; கணவர் விக்கி மற்றும் குழந்தைகளுடன் மார்னிங் வைப் பண்ணும் நயன்தாரா!
 

Tap to resize

Vaazhai Movie Review

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படம், மிகவும் பொறுமையாக நகர்வதாக சில விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும்... இப்படத்தின் கதை வாழை தொழிலாளர்கள் சந்திக்கும் அவலத்தை கூறுவது என்றும், எனவே இப்படத்தை கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டும் என பல இயக்குனர்கள் மாரி செல்வராஜை புகழ்ந்து தள்ளி வருகிறார்கள்.

Director Bala Wishes

குறிப்பாக இயக்குனர் பாலா, 'வாழை' படத்தை பார்த்த பின்னர், இயக்குனர் மாரி செல்வராஜை கட்டி அணைத்து முத்தம் கொடுத்தார். அதேபோல் விஜய் டிவி பிரபலமான தங்கதுரை படம் பார்த்த கையோடு மாரி செல்வராஜ் கட்டியணைத்து கதறி அழுதது பார்ப்பவர்கள் நெஞ்சையே உருக வைத்தது. இயக்குனர் ராம் , இயக்குனர் மாரி செல்வராஜின் முதல் கதை இது என்றும்... ஆனால் நான் தான் இந்த படத்தை முதலில் எடுக்க வேண்டாம் என அவரிடம் சொன்னேன். அவரை நினைக்கும் போது மிகவும் பெருமையாக உள்ளது என பேசினார்.

'கோட்' படத்தின் Spark பாடலில் விஜய் அணிந்திருக்கும் இந்த கூலிங் கிளாஸ் எவ்வளவு தெரியுமா?
 

Vaazhai Day 1 Box Office

விமர்சன ரீதியாக தொடர்ந்து பாராட்டுகளை குவித்து வரும் இந்த படம், ஏற்கனவே ஓடிடிக்கு நல்ல விலைக்கு விற்கப்பட்ட நிலையில்... தற்போது இப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி வாழை திரைப்படம் நேற்று ஒரே நாளில் மட்டும் 1.3 கோடி முதல் 1.5 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் படத்திற்கு கிடைக்கும் உணர்வு பூர்வமான பாராட்டுக்கள், இப்படத்தின் வசூலை அதிகரிக்கும் என திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Latest Videos

click me!