நடிகை நயன்தாரா தன்னுடைய காதல் கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் இரட்டை குழந்தைகளுடன்... காலையிலே வைப் பண்ணும் சில புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது லைக்குகளை குவித்து வருகிறது.
நடிகை நயன்தாரா தற்போது நடித்து வரும் 'டாக்சிக்' படப்பிடிப்புக்காக வெளியூரில் தங்கி உள்ளார். இதற்காக இயற்க்கை எழில் சூழ்ந்த ஹோட்டலில் தான் நயன்தாரா... தன்னுடைய கணவர் மற்றும் குழந்தைகளுடன் உள்ளதாக கூறப்படுகிறது.
28
Nayanthara And Vignesh Shivan Morning Vibe
நேரம் கிடைக்கும் போதெல்லாம் இயற்கையை ரசித்தாப்போல் குழந்தைகள் மற்றும் கணவருடன் எடுத்து கொள்ளும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வரும் நயன், தற்போது இன்னும் சில புதிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
இந்த போட்டோஸில் நயன்... கணவர் விக்னேஷ் சிவனுடன் காதலோடு கைகோர்த்து, இந்த காலை பொழுதை என்ஜோய் செய்கிறார். இவர்கள் இருவருக்குள்ளும் இருக்கும்... காதலை அவர்கள் முகத்தில் பிரதிபலிக்கும் புன்னகையை பார்த்தே புரிந்து கொள்ள முடிகிறது.
48
Matching Matching Dress Code
நயன் விக்கி இருவரும் நேவி ப்ளூ நிற உடை அணிந்துள்ள நிலையில், இதை தொடர்ந்து அப்பா - அம்மாவுடன் உயிர் - உலகமும் இணைந்து காலை பொழுதை அழகாக்கி உள்ளனர்.
நயன் - விக்கியின் குழந்தைகளான உயிர் - உலகம் இருவரும் கியூட்டான நீளம் மற்றும் வெள்ளை நிறத்திலான நைட் ட்ரெஸ் அணிந்து சமத்தாக போஸ் கொடுத்துள்ளனர். இந்த புகைப்படங்களையும் நயன்தாரா வெளியிட்டுள்ளார்.
68
Nayanthara with Two Kids
கடந்த சில வாரங்களாகவே நயன்தாரா, தன்னுடைய குழந்தைகளுடன்... அந்த இயற்க்கை சூழல் நிறைந்த நட்சத்திர ஹோட்டலில் தான் தங்கியுள்ளார். ஏற்கனவே தன்னுடைய பணிக்கு செல்லும் முன் குழந்தைகளுடன் ஒவ்வொரு நானும் பொழுதை கழிப்பதை அவர் தினம் விரும்புகிறார்.
நயன்தாராவின் கைவசம் தற்போது டாக்சிக் உட்பட, தனி ஒருவன் 2, குட் பேட் அக்லி, மூக்குத்தி அம்மன் 2, மஹாராணி என 6 படங்களுடன் படு பிஸியான ஹீரோயினாக வலம் வருகிறார்.
88
Nayanthara And Vignesh shivan Movies
அதே போல் விக்னேஷ் சிவன் பிரதீப் ரங்கநாதனை ஹீரோவாக வைத்து இயக்கியுள்ள 'லவ் இன்சூரன்ஸ் கம்பனி' திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள் நிறைவடைந்து, போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.