கேரளாவின் சேரப்புழா பகுதியில் கடந்த 1992ம் ஆண்டு பிறந்த நடிகை தான் மடோனா செபாஸ்டின். இவர் பெங்களூரில் தனது பட்டப் படிப்பை முடித்து, அதன் பிறகு மாடலிங் துறையில் களமிறங்க, இப்போது தமிழ் மற்றும் மலையாள மொழியில் அதிக அளவில் படங்களில் நடித்து வருகிறார்.
கடந்த 2015ம் ஆண்டு மலையாள மொழியில் வெளியான "பிரேமம்" திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நல்ல பல கலைஞர்களில் மடோனா செபஸ்டினும் ஒருவர். தமிழில் "காதலும் கடந்து போகும்" என்கின்ற திரைப்படம் தான் இவர் கோலிவுட்டில் நடித்த முதல் திரைப்படம். தொடர்ச்சியாக தமிழில் "கவன்", "பா பாண்டி", "ஜூங்கா", "வானம் கொட்டும்" போன்ற திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றார்.
34
Actresss Madonna Sebastian
அவ்வப்போது தெலுங்கு மற்றும் கன்னட மொழியிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ள மடோனா செபாஸ்டியன், இறுதியாக தமிழில் தளபதி விஜயின் லியோ திரைப்படத்தில் அவருடைய தங்கையாக நடித்திருந்தார். கேரள நடிகையாக இருந்தாலும் அதிக அளவில் தமிழ் திரைப்படங்களில் நடித்து வரும் மடோனா செபாஸ்டின் தற்பொழுது "அதிர்ஷ்டசாலி" உள்ளிட்ட 2 தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
44
Madonna Sebastian Photos
அதுமட்டுமல்லாமல் அவ்வப்போது இணைய தொடர்களிலும் நடித்து வரும் மடோனா, தனது சமூக வலைதள பக்கங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். அவ்வப்போது, தன்னுடைய கவர்ச்சிகரமான Photo Shootகளை வெளியிட்டு அவருடைய ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகின்றார்.