இதுவரை தமிழ் திரை உலக வரலாற்றில் யாராலும் சொல்லப்படாத ஒரு கதை களத்தை அமைத்து, அதை வெற்றிகரமாக இப்பொழுது படமாக எடுத்து முடிக்கவுள்ளார் இயக்குனர் சிறுத்தை சிவா. தல அஜித்தை வைத்து தொடர் வெற்றிகளை கொடுத்த சிவா, இப்பொது சூர்யாவுடன் இணைந்து இந்த "கங்குவா" என்கின்ற படத்தில் பணியாற்றியுள்ளார். இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதுவரை நடிகர் சூர்யாவின் திரை வரலாற்றிலேயே, சுமார் 500 கோடி ரூபாயை தாண்டி மாபெரும் பட்ஜெட்டில் உருவாகியுள்ள முதல் திரைப்படம் கங்குவா என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்ல உலக அளவில் சுமார் 38 மொழிகளில் இந்த திரைப்படம் வருகின்ற அக்டோபர் மாதம் 10ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தில் சூர்யாவின் தம்பி, நடிகர் கார்த்திக்கும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
34
Kanguva Teaser
வருகின்ற அக்டோபர் மாதம் 10ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படம் திரைக்கு வரும் அதே நாளில், சூர்யாவின் கங்குவா திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கு முன்னதாக ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான "ஜெய் பீம்" திரைப்படமும், சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த "அண்ணாத்த" திரைப்படம் ஒரே வாரத்தில் வெளியாகி நேருக்கு நேர் மோதிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
44
Kanguva Pre Release Business
இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் வேட்டையனும், கங்குவாவும் இருக்கும் நிலையில் அவை ஒரே நாளில் மோதவிருப்பது தமிழ் ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் கங்குவா பிரீ ரிலீஸ் பிசினஸாக தமிழகத்தில் மட்டும் சுமார் 60 கோடி ரூபாயும், உலக அளவில் சுமார் 350 கோடி ரூபாயும் வெளியிட்டுக்கு முன்பே வசூல் செய்து சாதனை படைத்திருப்பதாக தற்பொழுது தகவல்கள் வெளியாகி வருகிறது.