இன்று டிஜிட்டல் துறையில் பெரிய அளவில் சாதிப்பவர்களுக்கு விருது கொடுக்கும் அளவுக்கு உயர்ந்துள்ள ஒரு நிறுவனம் தான் "பிளாக் ஷீப்". ஆரம்ப கட்டத்தில் சிறிய யூடியூப் சேனலாக துவங்கப்பட்ட இந்த நிறுவனம், இன்று வடிவேலுவை பிராண்ட் அம்பாசிடராக மாற்றி பல முன்னெடுப்புகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பிளாக் ஷீப் நிறுவனத்தில் "இவள்" நந்தினி என்கின்ற தலைப்பில் பெண்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வீடியோக்களை வெளியிட்டு, அதன் மூலம் பிரபலமடைந்தவர் தான் நந்தினி. இணைய வழியில் இவருக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் உள்ளது அனைவரும் அறிந்ததே. தனது நேர்த்தியான நடிப்பால் மக்களை கவர்ந்தவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
34
Dear Movie
அண்மையில் "டியர்" என்ற திரைப்படத்திலும் நடித்துள்ள நந்தினி தற்பொழுது தனது வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு செல்லவிருக்கிறார். தன்னுடன் இணைந்து பிளாக் ஷீப்-பில் பயணித்து வந்த ஒருவரை அவர் திருமணம் செய்துகொள்ள உள்ளார்.
44
Director Dude Vicky
பிரபல பிளாக் ஷீப் நிறுவனத்தில் எழுத்தாளராக பணியாற்றி வந்த "டூட்" விக்கி தற்பொழுது "மண்ணாங்கட்டி சீன்ஸ் 1960" என்கின்ற திரைப்படத்தை பிரபல நடிகை நயன்தாராவை வைத்து இயக்கி வருகின்றார். விரைவில் அந்த திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், இயக்குனரை விக்கியை தான் நந்தினி விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளார். இப்போது அவர்களின் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.