தளபதி விஜய் நடித்துள்ள 'Goat' படத்தில் இடம்பெறும் மூன்றாவது சிங்கிலில் விஜய் அணிந்திருக்கும் கூலிங் கிளாஸ் குறித்த விலை மற்றும் அதன் விவரம் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய், தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் 'கோட்' படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்த மாதம் 5-ஆம் தேதி இப்படம் ரிலீசாக உள்ள நிலையில், அடிக்கடி இப்படம் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.
25
GOAT Movie
விஜய் தற்போது நடித்து முடித்துள்ள கோட் திரைப்படம், சுமார் 300 முதல் 350 கோடி பட்ஜெட்டில் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்காக விஜய்க்கு மட்டும் சுமார் 200 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ள நிலையில், வெங்கட் பிரபு 20 கோடிக்கு மேல் சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் விஜய் அப்பா - மகன் என இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.
அப்பா விஜய்க்கு ஜோடியாக சினேகா நடிக்க, மகன் விஜய்க்கு ஜோடியாக... மீனாட்சி சவுத்திரி நடித்துள்ளார். லைலா, பிரஷாந்த், அஜ்மல் அமீர், பிரபு தேவா, பிரேம்ஜி அமரன், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
45
Goat Trailer Get Good Reviews
இந்த படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதே நேரம் இப்படத்தில் இடம்பெற்ற மற்ற பாடல்களுடன் ஒப்பிடுகையில்... 'spark' பாடல் சில விமர்சனங்களுக்கும் ஆளானது. இந்த பாடலில் விஜய் அணிந்திருந்த கூலிங் கிளாஸ் அனைவரையும் கவர்ந்த நிலையில்... இதன் விலை மற்றும் மற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, Diesel நிறுவனத்தை சேர்ந்த இந்த கூலிங் கிளாஸின் 0LD10024 OCCHIALE என்கிற சீரிஸை கொண்டது. இதன் விலை 16,198 ரூபாய் என தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.