தேசிய விருது நடிகைக்கு ஜோடி போடும் விஜய் சேதுபதி!

Published : Aug 23, 2024, 07:25 PM IST

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில், சமீபத்தில் வெளியான 'மகாராஜா' திரைப்படம் 100 கோடி வசூல் சாதனை செய்த நிலையில், அவருடைய புதிய திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.  

PREV
15
தேசிய விருது நடிகைக்கு ஜோடி போடும் விஜய் சேதுபதி!
Pandiraj Movie

இயக்குனர் பாண்டிராஜ், தமிழில் தொடர்ந்து ஜனரஞ்சகமான திரைப்படங்களை இயக்கி, ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர். இவர் இயக்கிய முதல் படமான 'பசங்க' திரைப்படம் சிறந்த பீச்சர் ஃபிலிம்முக்கான தேசிய விருதை வென்றது. மேலும் சிறந்த ஸ்கிரீன் பிளேவுக்கான தேசிய விருதையும் வென்றது. அதே போல் தமிழ்நாடு ஸ்டேட் பிலிம் விருது, உள்ளிட்ட பல விருதுகளை வென்று இயக்குனர் பாண்டிராஜை பிரபலமடைய வைத்தது.
 

25
Pandiraj Movies

இதை தொடர்ந்து 'வம்சம்' திரைப்படத்தை அருள்நிதியை வைத்து இயக்கிய இவர், நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து 'மெரினா' திரைப்படத்தை இயக்கினார். குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட  இந்த படம் சிறந்த படத்திற்கான தமிழ்நாடு ஸ்டேட் விருதை பெற்றது. அதே போல் நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் மிகப்பெரிய திருப்புமுறையை ஏற்படுத்தியது.

விபத்தில் சிக்கிய தொகுப்பாளினி அஞ்சனா; அறுவை சிகிச்சைக்கு பின் வெளியிட்ட பதிவு!

35
National Award Director

பின்னர் 'கேடி பில்லா கில்லாடி ரங்கா', 'பசங்க 2', 'இது நம்ம ஆளு', 'கதகளி', 'கடைக்குட்டி சிங்கம்', 'நம்ம வீட்டு பிள்ளை','எதற்கும் துணிந்தவன்' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் பாண்டிராஜ்... தற்போது இரண்டு வருடங்கள் கழித்து, விஜய் சேதுபதியுடன் கைகோர்த்துள்ளார்.

45
Nithya Menen

இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக, சமீபத்தில் 'திருச்சிற்றம்பலம்' படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்ற நடிகை நித்யா மேனன் ஹீரோயினாக  நடிக்க உள்ளார். பொதுவாகவே நித்யா மேனன் நல்ல கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடிக்கும் நடிகை என்பதாலும், இவர் முதல் முறையாக விஜய் சேதுபதியுடன் கைகோர்த்துள்ளதாலும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

'வாழை' படத்தின் மூலம் ரசிகர்களின் உணர்வை தொட்ட மாரி செல்வராஜ்! கண்ணீர் விட்டு கதறிய தங்கதுரை!
 

55
Vijay Sethupathi

இந்த படத்தை கடந்த நான்கு தலைமுறைகளாக திரைப்பட தயாரிப்பில் சாதனை படைத்து வரும் சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் டிஜே தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரிக்கின்றனர். அனைத்து வயதினரும் ரசித்து பார்க்கும் வகையில் உருவாக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு, தற்போது பரபரப்பாக நடந்து வருவதாகவும்... கூடிய விரைவில் இப்படம் குறித்த மற்ற தகவல்கள் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories