பிரபல இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் தற்பொழுது விறுவிறுப்பாக உருவாகி வரும் திரைப்படம் தான் "விடாமுயற்சி". கடந்த ஆண்டு துவக்கத்திலேயே இந்த திரைப்படத்திற்கான அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது. முதலில் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இந்த திரைப்படத்தை இயக்குவதாக இருந்த நிலையில், தயாரிப்பு நிறுவனத்துடன் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக அவர் படத்தில் இருந்து வெளியேறினார்.
நடிகை திரிஷா, ஆக்ஷன் கிங் அர்ஜுன், ஆரவ் மற்றும் ரெஜினா உள்ளிட்ட பலரும் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில் வருகின்ற தீபாவளி திருநாளுக்கு விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும் என்றும், அதே நேரம் அஜித் நடித்து வரும் "குட் பேட் அக்லி" திரைப்படம் எதிர்வரும் 2025ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
34
Vidaamuyarchi Update
விக்னேஷ் சிவன் படத்திலிருந்து வெளியேறி, அதன் பிறகு மகிழ் திருமேனி அப்படத்தில் இணைந்த பிறகும் கூட, பெரிய அளவில் எந்த விதமான அறிவிப்பும் அப்படம் குறித்து வெளியாகவில்லை. "விடாமுயற்சி" என்கின்ற டைட்டில் மட்டுமே சுமார் ஆறு மாத காலத்திற்கும் மேலாக வலம்வந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் தான் கடந்த ஆண்டு இறுதியில் அசர்பைஜான் என்கின்ற நாட்டில் விறுவிறுப்பாக அப்பிட பணிகள் மீண்டும் துவங்கியது.
44
good bad ugly
ஆனால் தற்பொழுது பிரபல வலைப்பேச்சு யூடியூப் சேனல் அளித்த தகவலின்படி விடாமுயற்சி பணிகள் இன்னும் முடிவடையாமல் உள்ள நிலையில், அது இந்த வருட இறுதியில் அல்லது, 2025 பொங்கலுக்கு வெளியாகும் என்றும், அதனால் குட் பேட் அக்லி, 2025ம் ஆண்டு சம்மர் ஸ்பெஷல் திரைப்படமாக வெளியாக வாய்ப்புகள் இருப்பதாக கூறியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.