Published : Aug 23, 2024, 06:01 PM ISTUpdated : Aug 24, 2024, 07:57 AM IST
சூர்யா மற்றும் கார்த்தி பட நடிகை பிரணீதாவுக்கு ஏற்கனவே 2 வயதில், பெண் குழந்தை உள்ள நிலையில்.. இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் இவருக்கு பேபி ஷவர் கொண்டாட்டம் நடந்துள்ளது. இந்த போட்டோஸ் தற்போது வைரலாகி வருகிறது.
மறைந்த முதல் கருணாநிதி குடும்பத்தில் இருந்து, உதயநிதிக்கு பின்னர் திரையுலகில் காலடி எடுத்து வைத்தவர் அருள்நிதி. இவர் 2011-ஆம் ஆண்டு நடித்து வெளியான திரைப்படம் 'உதயன்'. இந்த படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பிரணீதா.
27
Pranita Subhash Pair with Karthi in Saguni
இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும், இந்த படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்திக்கு ஜோடியாக பிரணீதா நடித்த சகுனி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
37
Pranita Subhash Pair with Suriya
பின்னர் சூர்யாவுக்கு ஜோடியாக 'மாஸ்' படத்திலும் நடித்திருந்தார். தெலுங்கு உள்ளிட்ட மற்ற தென்னிந்திய மொழிகளிலும் இவர் கவனம் செலுத்தியதால், தமிழில் அதிக படங்கள் நடிக்க முடியாமல் போனது.
47
Pranita Subhash First baby
பட வாய்ப்புகள் குறைந்த பின்னர்.. தன்னுடைய காதலர் நிதின் ராஜு என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். கொரோனா காலத்தில்... அவசர அவசரமாக திருமணம் நடந்ததால், யாருக்கும் அழைப்பு விடுக்கமுடியவில்லை என தன்னுடைய சோகத்தையும் பிரணீதா பின்னர் வெளிப்படுத்தினார்.
திருமணம் ஆன ஒரே வருடத்தில் அழகிய பெண் குழந்தைக்கு தாயான இவர், அவ்வப்போது குழந்தையுடன் எடுத்து கொள்ளும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
67
Pranita Subhash photos
குழந்தை பிறந்த பின்னர், தன்னுடைய குழந்தை வளர்ப்பில் கவனம் செலுத்தினார். இந்நிலையில், கடந்த மாதம் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் தகவலை அண்மையில் போட்டோ ஷூட் வெளியிட்டு அறிவித்த நிலையில் இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தது.
இதை தொடர்ந்து, பிரணீதா மாடர்ன் உடையில்... தற்போது மாடர்னாக பேபி ஷவர் கொண்டாடியுள்ளார். இதுகுறித்த போட்டோஸ் தற்போது சமூக வலைத்தளத்தில் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.